Panaji: பனாஜி: பார்மாலின் கலந்த மீன்கள் விற்பனை ஆவதை தடுக்க கேரளா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று ஆளும் கட்டசியுடன் கூட்டணி வைத்திருக்கும் ஜனதா தளத்தை சேர்ந்த சி.கே நானு தெரிவித்துள்ளார்.
“பார்மலின் கலக்கப்பட்ட மீன்களை தடை செய்ய கேரளா அரசு சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. பார்மலின் கலந்த மீன்களை எடுத்து செல்லும் வாகனங்களின் ஓட்டுனரும், உரிமையாளரும் கைது செய்யப்படுகின்றனர்” என்று சி.கே நானு தெரிவித்துள்ளார்
புற்று நோய் உண்டாக்க கூடிய பார்மாலின் ரசாயனம் கலந்த மீன்களின் விற்பனையை தடை செய்ய, கேரளா அரசு சார்பில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கோவா முதலமைச்சர் மனோகர் பனிக்கர், மீன்களில் பார்மலின் கலந்துள்ளதாக கூறி கேரளா அரசு மீன் விற்பனையை முடக்க முயற்சி செய்கிறது. சோதனை செய்ததில், பார்மாலின் கலக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார்.