தொடர்ந்து 2-வது நாளாக அவை அலுவல்கள் பாதிக்கப்பட்டது.
Thiruvananthapuram: கேரளாவில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து 2-வதுநாள அவையை ஒத்தி வைத்து சபாநாயகர் ஸ்ரீராம கிருஷ்ணன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சபரி மலை கோயிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறி கேரள சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்னையை கிளப்பினர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் கேள்வி நேரத்தை சபாநாயகர் ஒத்தி வைத்தார். இதன்பின்னர் ஜீரோ ஹவரும் ஒத்தி வைக்கப்பட்டது. அவை காலை 9 மணிக்கு தொடங்கியபோது எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலாதான் சபரி மலை விவகாரத்தை கிளப்பினார்.
இதற்கு பதில் அளித்த முதல்வர் பினராயி விஜயன், சபரி மலை விவகாரம் குறித்து நேற்றே விவாதித்து விட்டோம். எதிர்க்கட்சிகள் இன்று அமளியில் ஈடுபடுவது சரியல்ல என்று கூறினார். இதனை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.