This Article is From Feb 06, 2020

மணமேடையில் தோழிகளுடன் அசத்தல் நடனம்! மாப்பிள்ளைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மணப்பெண்! #Video

மணமேடையில் தோழிகளுடன் மணப்பெண் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மணமேடையில் தோழிகளுடன் அசத்தல் நடனம்! மாப்பிள்ளைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மணப்பெண்! #Video

மணப்பெண்ணின் திருமண நடனம் கேரளாவில் நடந்துள்ளது.

மணமேடையில் மணப்பெண்ணுக்காக மாப்பிள்ளை காத்திருக்க, அவளோ தனது தோழிகளுடன் அசத்தல் நடனம் ஆடி, மணமகனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மணமகளின் நடனக்காட்சிகள் அடங்கிய வீடியோதான் தற்போது இணையத்தில் வைரல். 

கேரளாவில் இந்த அசத்தல் சம்பவம் நடந்துள்ளது. மனோரமா ஆன்லைன் அளித்துள்ள தகவலின்படி மணமகளின் பெயர் அஞ்சலி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிவப்பு வண்ண சேலை அணிந்து, மலையூறு மம்பட்டியான் என்ற தமிழ்ப்பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார் மணமகள். அவருடன் தோழிகளும் சேர்ந்து அதே ஸ்டெப்பை போட, திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் கவனமும் அவர்கள் பக்கம்தான் திரும்புகிறது. 

தனது மாப்பிள்ளை வருணுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக மணப்பெண் அஞ்சலி இதனைச் செய்தாராம். இந்த திருமணம் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள சி.ஆர். ஆடிட்டோரியத்தில் நடைபெற்றிருக்கிறது. 

முதலில் இந்த வீடியோ பேஸ்புக்கில் பரவியது. இந்த வீடியோ குறைந்த நேரத்தில் 76 ஆயிரம் பார்வைகளை கடந்தது. இதன்பின்னர் மற்ற சமூக வலைதளங்களான யூ டியூப், ட்விட்டர் போன்றவற்றில் பரவி வைரலாக மாறி விட்டது. நடனத்தை பார்க்க...
 

.

ட்விட்டரில் பகிரப்பட்ட சில மணி நேரங்களில் அஞ்சலியின் அசத்தல் நடனம் 50 ஆயிரம் பார்வைகளை கடந்துள்ளது. 
.

இதனை பலர் பாராட்டினாலும், ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
.

திருமண நிகழ்ச்சிகளில் இதுபோன்ற வித்தியாசமான சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. அவை இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டும் வருகிறது. அகமதாபாத்தில் மணப்பெண் ஒருவர், புல்லட் பைக்கில் மணமேடைக்கு வந்தார். இந்த வீடியோவும் வைரலானது. .

.