மொத்தம் 896 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
Thiruvananthapuram: கேரளாவின் 5 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கடும் மழையிலும் வாக்காளர்கள் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
வட்டியூர்காவ் (திருவனந்தபுரம்). அரூர் (ஆலப்புழா), கொன்னி (பத்னம்திட்டா), எர்ணாகுளம் மற்றும் மஞ்சேஸ்வரம் (காசர்கோடு) ஆகிய இடங்களில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் மொத்தம் 9.57 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 896 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆரம்பகட்ட தகவலின்படி மஞ்சேஸ்வரம் தவிர மற்ற நான்கு தொகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
ஆளும் சிபிஐ (எம்) தலைமையிலான எல்.டி.எஃப் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான யூ.டி.எஃப் மற்றும் பாஜக –என்.டி.ஏ ஆகிய கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)