This Article is From Dec 31, 2019

நிதி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்கு மதிப்பீட்டில் கேரளா, சண்டிகர் மாநிலங்கள் முன்னிலை

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடும் நிதி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals) திட்டத்தில் 2019 மதிப்பீடுகள் குறித்த அறிக்கை வெளியானது. இதில் பீகார் மாநிலம் மிக மோசமான இடத்தில் உள்ளது.

நிதி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்கு மதிப்பீட்டில் கேரளா, சண்டிகர் மாநிலங்கள் முன்னிலை

கேரளா முதலிடத்திலும் ஹிமாச்சல் பிரதேசம் இரண்டாவது இடத்திலும் உள்ளது(FILE)

New Delhi:

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடும் நிதி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals) திட்டத்தில் 2019 மதிப்பீடுகள் குறித்த அறிக்கை வெளியானது. இதில் பீகார் மாநிலம் மிக மோசமான இடத்தில் உள்ளது. 

“எஸ்.டி.ஜி இந்தியா இண்டெக்ஸ் 2019இன் படி உத்தர பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் அதிக பட்ச முன்னேற்றத்தை காட்டியுள்ளன. ஆனால், குஜராத் போன்ற மாநிலங்கள் 2018 தரவரிசையிலிருந்து எந்தவொரு மாற்றத்தையும் காட்டவில்லை.

“கேரளா 70 மதிப்பெண்களுடன் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. சண்டிகர் மாநிலமும் 70 மதிப்பெண்களுடன் முதலிட்டத்தை பிடித்துள்ளது. 

“இமாச்சலப் பிரதேசம் இரண்டாவது இடத்தையும், ஆந்திரா, தமிழ்நாடு, மற்றும் தெலுங்கானா மூன்றாம் இடத்தையும் பகிர்ந்து கொண்டன” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“2030 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் எஸ்.டிஜி இலக்கை இந்தியா இல்லாமல் ஒருபோதும் பூர்த்தி செய்ய முடியாது. ஐநாவின் எஸ்.டி.ஜி இலக்கை அடைவதற்கு நாங்கள் முழுமையாக உறுதி பூண்டுள்ளோம்” என்று நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் அறிக்கை வெளியிட்ட போது தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார், தென் மாநிலங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

மேற்கு வங்கம் (தர வரிசை14) நிதி ஆயோக்கில் எஸ்டிஜி இண்டெக்ஸ் 2019இல் சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆனால், கல்வி நிலையில் மேற்கு வங்கம் முதல் 3 செயல்திறன் கொண்ட மாநிலங்களில் இருக்க வேண்டும் என்று ராஜீவ் குமார் தெரிவித்தார். நிதி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்கின் 2030க்கான நிகழ்ச்சி நிரலை அடைய மோடி அரசு உதவும் என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் தெரிவித்தார்.

அந்த அறிக்கையின்படி நீர் மற்றும் சுகாதாரம், தொழில் மற்றும் புதுமை ஆகியவற்றில் பெரும் வெற்றியைப் பெற்ற இந்தியாவின் கூட்டு மதிப்பெண் 2018இல் 57 ஆக இருந்து 2019இல் 60 ஆக உயர்ந்தது. 

இருப்பினும், ஊட்டச்சத்து மற்றும் பாலினம் இந்தியாவுக்கு தொடர்ந்து சிக்கலான பகுதிகளாக இருக்கின்றன, இதற்கு அரசாங்கத்திடமிருந்து அதிக கவனம் செலுத்தும் அணுகுமுறை தேவைப்படுகிறது.

2018 இல் முன்னணி பிரிவில் மூன்று மாநிலங்கள் மட்டுமே இடம் பெற்றன அவை - இமாச்சலப் பிரதேசம், கேரளா மற்றும் தமிழ்நாடு.

"2019 ஆம் ஆண்டில், மேலும் ஐந்து மாநிலங்கள் இந்த சுற்றில் இணைந்தன - ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, சிக்கிம் மற்றும் கோவா, மொத்த எண்ணிக்கை எட்டாக கொண்டுள்ளன" என்று அது குறிப்பிட்டது.

வறுமைக் குறைப்பு தொடர்பாக, தமிழகம், திரிபுரா, ஆந்திரா, மேகாலயா, மிசோரம் மற்றும் சிக்கிம் ஆகியவை சிறப்பாக செயல்பட்டுள்ளன. நீடித்த வளர்ச்சி இலக்குதான் உலகத் தலைவர்களின் லட்சிய உறுதிபாடாகும். சமூகங்களின் நல்வாழ்வின் பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக அம்சங்களை பின்பற்றுகிற உலகளாவிய முன்னோடியில்லாத நிகழ்ச்சி நிரலை வகுக்கிறது.

.