NEW DELHI: புதுடில்லி: 1997 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஊழல் வழக்கு தொடர்பாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திற்கு சிபிஐ மனு அளித்துள்ளது.
கடந்த 1997 ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் மின்சக்தி துறை அமைச்சராக பினராயி விஜயன் பதவி வகித்தார். அப்போது, மாநிலத்தில் உள்ள மூன்று நீர்மின் திட்டங்களை சரிசெய்வதற்காக எஸ்.என்.சி லவலின் என்ற கனடா நிறுவனத்திற்கு அளவு கடந்த ஒப்பந்த விலை நிர்ணயித்ததாக பினராயி விஜயன் மீது குற்றம் சாட்டப்பட்டது
இது குறித்து, கடந்த 2007 ஆம் ஆண்டு, பினராயி விஜயன், உயர் அதிகாரிகள் ஆகியோர் மீத சிபிஐ வழக்கு தொடர்ந்தது. 2013 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மற்ற அமைச்சர்ளும் இந்த வழக்கில் தொடர்புடைய நிலையில், பினராயி விஜயன் மீது மட்டும் குற்றம் சுமத்தப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியது. மேலும், குற்றம் செயல்களை நிரூபிக்க போதுமான ஆதரங்கள் இல்லாததால், பினராயி விஜயன் மீதும், அதிகாரிகள் மீதும் தொடரப்பட்ட வழக்கு செல்லாது என உத்தரவிட்டு தீர்ப்பு வெளியிட்டது.
இதனை அடுத்து, இந்த வழக்கு சார்ந்து குறிப்பிட்ட சிலரை விடுவித்து, வேறு குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சிபிஐ மேல் முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், 1997 ஆம் ஆண்டு பதியப்பட்ட ஊழல் வழக்கு தொடர்பாக, கேரள மாநில முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.