This Article is From Jun 15, 2020

மகள் திருமணத்தை மிக எளிமையாக வீட்டிலேயே நடத்திய கேரள முதலமைச்சர்!!

மணமகன் ரியாஸின் பெற்றோர் வயது முதிர்ந்தவர்கள். அவர்கள் கோழிக்கோட்டில் இருக்கிறார்கள். அங்கிருந்து திருமணம் நடைபெறும் திருவனந்தபுரத்திற்கு வரவேண்டும் என்றால் 380 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். இந்த சூழலில் மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி, மணமகனின் பெற்றோர் பயணத்தை தவிர்த்து திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.

மகள் திருமணத்தை மிக எளிமையாக வீட்டிலேயே நடத்திய கேரள முதலமைச்சர்!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 30 பேருக்கும் குறைவானவர்களே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

Thiruvananthapuram:

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது மகள் வீணாவின் திருமணத்தை மிக எளிமையாக தனது அரசு இல்லத்திலேயே இன்று நடத்தியுள்ளார். தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்று தொழில்துறையில் ஈடுபட்டு வரும் வீணா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவர் முகம்மது ரியாஸை கரம் பிடித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவாக DYFI எனப்படும் இந்திய ஜனநாயக இளைஞர்  சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் தேசிய தலைவராக முகம்மது ரியாஸ் இருந்து வருகிறார். கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் ரியாஸ் இருக்கிறார்

ukjstvk8

கேரள முதல்வரின் மகள் வீணா ஐ.டி. துறையில் பணியாற்றி வருகிறார்.

திருமண சிறப்பு பதிவு சட்டத்தின் கீழ் கேரள முதல்வர் வீட்டு திருமணம் நடந்து முடிந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 30 பேருக்கும் குறைவானவர்களே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இவர்கள், மணமக்கள் வீட்டாருக்கு மிக நெருக்கமானவர்கள்.

குடும்ப உறுப்பினர்களை தவிர்தது கேரள அமைச்சர் இ.பி. ஜெயராஜனும் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மணமகன் ரியாஸின் பெற்றோர் வயது முதிர்ந்தவர்கள். அவர்கள் கோழிக்கோட்டில் இருக்கிறார்கள். அங்கிருந்து திருமணம் நடைபெறும் திருவனந்தபுரத்திற்கு வரவேண்டும் என்றால் 380 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும். இந்த சூழலில் மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி, மணமகனின் பெற்றோர் பயணத்தை தவிர்த்து திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.

.

omb7vqt

.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கும் மேல் கலந்து கொள்ளக்கூடாது என்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி திருமணம் நடைபெற்றாலும், போதிய தனிநபர் இடைவெளி மற்றும் சுகாதார விதிகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

.

mtur4ajg

மணமக்களை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி சதரூர் வாழ்த்தியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘ஒருவழியாக முதல்வர் பினராயி விஜயனின் மகள் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. கொரோனா போன்ற பேரழிவுகள் வந்தாலும், வாழ்க்கையில் நடக்க வேண்டியது நடந்துதான் ஆக வேண்டும். இந்த நேரத்தில் அன்பை பரிமாறுவது, சிறப்பான தருணமாக அமையும்' என்று கூறியுள்ளார்.

.