'Corona' Shop: ‘கொரோனா’ கடையின் உரிமையாளர் பிரதீப், தன் கடைக்கு அதிகமாக நபர்கள் வருவதாகவும், கடைக்கு ஏன் இப்படி பெயர் வைத்துள்ளீர்கள் என்று கேட்கப்படுவதாகவும் தெரிவிக்கிறார்.
ஹைலைட்ஸ்
- உலகின் 145 நாடுகளுக்கு கொரோனா பரவியுள்ளது
- இந்தியாவில் 170 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
- உலகளவில் இதவரை 9,000 பேர் கொரோனால் இறந்துள்ளனர்
New Delhi: 'Corona' Shop: கேரளாவின் முவாட்டுப்புழா என்னும் இடத்தில் ‘Corona' என்னும் துணிக்கடை உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் உலகின் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில், அதே பெயரில் இருக்கும் இந்தக் கடையும் வைரல் கன்டென்டாக மாறியுள்ளது.
‘கொரோனா' கடையின் உரிமையாளர் பிரதீப், தன் கடைக்கு அதிகமாக நபர்கள் வருவதாகவும், கடைக்கு ஏன் இப்படிப் பெயர் வைத்துள்ளீர்கள் என்று கேட்கப்படுவதாகவும் தெரிவிக்கிறார்.
“இந்தக் கடையை 27 ஆண்டுகளுக்கு முன்னர் நான் திறக்கும்போது, இணைய வசதிகள் கிடையாது.
கொரோனா என்கிற வார்த்தை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதற்கு என்ன அர்த்தம் என்று அகராதியில் பார்த்தபோது, சூரியன் உள்ளிட்ட பல அர்த்தங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது,” என்னும் பிரதீப், உள்ளூரில் ‘கொரோனா பிரதீப்' என்றே அழைக்கப்படுகிறார்.
60 வயதாகும் பிரதீப், ‘கொரோனா' என்னும் பெயர் இருப்பதானாலேயே வியாபாரம் அதிகரித்துவிடவில்லை என்றும் வருத்தப்படுகிறார்.
“தற்போது உள்ள சூழலில் வியாபாரம் செய்வது கடினமாகத்தான் உள்ளது. கேரளாவில் மக்கள் வெளியில் நடமாடுவதற்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால், மக்கள் வெளியே வந்தாலும், துணி வாங்கும் எண்ணத்தில் இல்லை,” என்று தகவல்களை பகிர்ந்து கொண்டார் பிரதீப்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கேரள அரசு, கல்வி நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடுவதையும் தவிர்க்கச் சொல்லியிருக்கிறது.
கேரளாவில் இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.