This Article is From Oct 08, 2019

Kerala Family Murder Case: 17 ஆண்டுகளில் 6 பேரை சயனைடு வைத்த கொலை செய்த பெண்

முதலில் 2002ஆம் ஆண்டு மாமியார் அன்னம்மாவும் 2008 ஆம் ஆண்டு மாமனார் டாம் தாமஸும் 2011 ஆம் ஆண்டு கணவர் ராய் தாமஸையும் சயனைடு வைத்து கொன்றுள்ளார்.

Kerala Family Murder Case: 17 ஆண்டுகளில்  6 பேரை சயனைடு வைத்த கொலை செய்த பெண்

அமெரிக்காவில் ராயின் சகோதரர் 2002-2016க்கு நடந்த மரணம் குறித்து சிறப்பு விசாரணைக்கு கோரியுள்ளார்.

Kozhikode:

கேரளாவில் 17 ஆண்டுகளில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு உணவில் சயனைடு கலந்து கொடுத்து பெண் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜாலி ஜோசப். இவர் ராய் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

தனது மாமானாரின் அண்ணன் மகன் சாஜூ மீது ஜாலிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அவருக்கும் இதேபோன்ற எண்ணம் இருந்துள்ளது. இவர்கள் இணைவதற்கு குடும்பத்தினர் தடையாக இருந்தனர். எனவே அவர்களை கொன்றுவிடலாம் என்று திட்டமிட்டுள்ளார். இதற்காக தனது நண்பர் மூலம் ஜாலி சயனைடு வாங்கி வந்துள்ளார். குடும்பத்தினரின் சாப்பிடும் உணவில் சயனைடு கலந்து கொலை செய்துள்ளார்.

அதேசமயம் அனைவரையும் ஒரே நேரத்தில் கொலை செய்து விட்டால் சிக்கிக் கொள்வோம். எனவே சில ஆண்டுகள் இடைவெளி விட்டு கொலைகளை செய்து வந்துள்ளார்.

முதலில் 2002ஆம் ஆண்டு மாமியார் அன்னம்மாவும் 2008 ஆம் ஆண்டு மாமனார் டாம் தாமஸும் 2011 ஆம் ஆண்டு கணவர் ராய் தாமஸையும் சயனைடு வைத்து கொன்றுள்ளார். ராயின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப வலியுறுத்திய அன்னமாவின் சகோதரர் மேத்யூவும் 2014 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். 

அதன்பின் சாஜியின் மனைவி மற்றும் ஒரு வயது மகளும் 2016 ஆம் ஆண்டில் உயிரிழந்தனர். அதன்பின் சாஜூவும் ஜாலியும் 2018 ஆம் ஆண்டில் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் அடுத்தடுத்த மரணங்களை கண்டு சந்தேகமடைந்த அமெரிக்காவில் ராயின் சகோதரர் 2002-2016க்கு நடந்த மரணம் குறித்து சிறப்பு விசாரணைக்கு கோரியுள்ளார். இந்த விசாரணையின் முடிவுகள் அந்த கிராமத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ராய் தாமஸின் சகோதரி “ ஜாலியை மூத்த சகோதரியாக கருதினேன். அவள் எல்லோரிடமும் நட்பாக இருந்தாள்” என்று கூறுகிறார்.

ஜாலிக்கும் ராய் தாமஸ்க்கும் நடந்த திருமணம் காதல் மற்றும் ஏற்பாடு திருமணமாகும். குடும்பத்தினரின் இறப்புக்கு பின் சொத்து குறித்து போலி ஆவணங்கள் வெளிவந்ததால் ராயின் சகோதரர்க்கு சந்தேகம் ஏற்பட்டு சிறப்பு விசாரணையை கோரியுள்ளார். 


 

.