Read in English
This Article is From Aug 24, 2019

பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் தீ விபத்து!! ஜன்னலை உடைத்து குடும்பத்தினர் மீட்கப்பட்டனர்!

நள்ளிரவு 2 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
இந்தியா Edited by

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Kochi:

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அவரது குடும்பத்தினர் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 

ஸ்ரீசாந்தின் இல்லம் கேரள மாநிலம் கொச்சியின் எடப்பள்ளி என்ற இடத்தில் உள்ளது. அங்கு அவர் தனது மனைவி, குழந்தையுடன் வசித்து வருகிறார். உதவிக்காக பணிப்பெண் ஒருவரும் வீட்டில் தங்கியுள்ளார். 

தற்போது சினிமா படப்பில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீசாந்த் மும்பைக்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. 

புகை வருவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த அவர்கள் வேகமாக செயல்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். 

Advertisement

வீட்டின் முதல் தளத்தில் ஸ்ரீசாந்தின் மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். தீ விபத்து தரைத் தளத்தில் ஏற்பட்டதால் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, ஸ்ரீசாந்தின் குடும்பத்தினர் மீட்கப்பட்டார்கள். மின் விசிறியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விவரம் அறிந்த ஸ்ரீசாந்த் கேரளா திரும்பிக் கொண்டிருக்கிறார்.

இந்திய அணிக்காக 27 டெஸ்ட்களில் விளையாடி 87 விக்கெட்டுகளை ஸ்ரீசாந்த் வீழ்த்தியுள்ளார். 2013 ஐ.பி.எல். சூதாட்டத்தில் பங்கேற்ற குற்றத்துக்காக கிரிக்கெட் விளையாட அவருக்கு பிசிசிஐ ஆயுள் தடை விதித்துள்ளது. இந்த தடை குறைக்கப்பட்டு 2020 செப்டம்பர் 12-ம்தேதியுடன் முடிவுக்கு வருகிறது. 

Advertisement
Advertisement