This Article is From Sep 10, 2018

கேரள நிவாரணம்: படிக்கட்டாக மாறிய மீனவ நாயகனுக்கு 'கார்' பரிசு!

மகேந்திரா நிறுவனத்தின் டீலர் சார்பில் புதிய மாரஸோ கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

கேரள நிவாரணம்: படிக்கட்டாக மாறிய மீனவ நாயகனுக்கு 'கார்' பரிசு!

ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள மீனவர் பரிசு வாங்கும் புகைப்படங்கள்

கேரள மாநிலத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் கனமழை பெய்தது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, நிவாரண பணிகள் தீவிரமாக நடைப்பெற்றன. அப்போது கேரள மீனவர்கள் மீட்பு பணிகளில் பெரும் உதவியாய் இருந்தனர். குறிப்பாக, வெள்ள பாதிப்பின் போது ஜெய்ஷால் என்ற மீனவர், தனது முதுகை படிக்கட்டாக்கிக் கொள்ள, பெண்கள் அவர் மீது ஏறி படகில் அமர்ந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.

இந்நிலையில், இவரது மீட்புப் பணியைப் பாராட்டி கோழிக்கோட்டைச் சேர்ந்த மகேந்திரா நிறுவனத்தின் டீலர் சார்பில் புதிய மாரஸோ கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் மாரஸோ காரை வாங்கிய, அதுவும் பரிசாகப் பெற்ற முதல் நபர் ஜெய்ஷால் தான். அப்போது, கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டி.பி. ராமகிருஷ்ணன், கார் சாவியை ஜெய்ஷாலிற்கு கொடுத்துப் பாராட்டினார்

வீடியோ காண்க - வெள்ள நிவாரணத்தின் போது மீனவரின் பேருதவி

மீனவர் பரிசு வாங்கும் புகைப்படங்களை, மகேந்திரா நிறுவன முதன்மை இயக்குனர், ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும், எராம் மோட்டர்ஸ் நிறுவனர் அகமது தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெய்ஷாலிற்கான வாழ்த்து சான்றிதழை பதிவிட்டார்.

Click for more trending news


.