বাংলায় পড়ুন Read in English
This Article is From Jan 31, 2020

வலையில் விழுந்த அரியவகை சுறா மீனை, கடலில் விட்ட மீனவர்கள்! வைரல் வீடியோ!!

Whale Shark எனப்படும் அரியவகை சுறா மீன்கள் இந்தியாவில் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்படுகின்றன.

Advertisement
விசித்திரம் Edited by

கடலில் மீண்டும் விடப்பட்ட அரியவகை திமிங்கல சுறா.

கேரளாவை சேர்ந்த மீனவர்களின் வலையில் அரிய வகை Whale Shark எனப்படும் திமிங்கல சுறா பிடிப்பட்டது. இது அழிந்து வரும் இனம் என்பதை உணர்ந்த மீனவர்கள் அதனை மீண்டும் கடலில் விட்டனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தில் InSeason Fish என்ற மீன்பிடி குழுவினர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். சுற்றுச் சூழல், மீன் பிடித் தொழில் பாதுகாப்பு, ஆரோக்கியமான கடல் சூழலுக்காக இந்த குழுவினர் பணியாற்றுகின்றனர்.

கேரளாவின் கோழிக்கோடு கடல் பகுதியில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தவகை சுறா மீன்கள் சுமார் 40 அடி நீளம் வரையில் வளரும் தன்மை கொண்டவை. உடலில் பெரிய அளவில் காணப்படும் வெண் புள்ளிகளால் இவை மற்ற மீன்களிடம் இருந்து மாறுபடுகின்றனர். இதனை அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக சர்வதேச அமைப்புகள் அறிவித்திருக்கின்றன. 

வீடியோவில், குறைந்தது 7 மீனவர்கள் போராடி மீனை கடலுக்குள் தள்ளுகின்றனர். இதற்காக கயிறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 
 

இந்த வீடியோ பகிரப்பட்ட 2 நாட்களில் 30 ஆயிரம் முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்டுள்ளது. ட்விட்டர் பயனர்கள், சுறா மீனை மீண்டும் கடலில் விட்ட மீனவர்களை பாராட்டியுள்ளனர். 

வைல்டு லைஃப் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியாவின் தகவல்படி, இந்திய வன விலங்குகள் பாதுகாப்பு சட்டம் 2001-ல் திமிங்கல சுறாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனை பாதுகாப்பதற்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. 

Advertisement
Advertisement