This Article is From Aug 18, 2018

கேரள வெள்ளம்: இணைய சேவை இல்லையென்றாலும் இருப்பிடம் குறித்த தகவலைப் பகிர்வது எப்படி?

பிளஸ் கோடு என்பது தெரு முகவரிகளைப் போன்றதே. முகவரிகள் தெரியாதபோது கூகுள் மேப்பின் பிளஸ் கோடு மூலம் தங்கள் இருப்பிடத்தைப் பற்றிய தகவலைப் பகிர்ந்துகொள்ள இயலும்.

கேரள வெள்ளம்: இணைய சேவை இல்லையென்றாலும் இருப்பிடம் குறித்த தகவலைப் பகிர்வது எப்படி?

கேரளா வெள்ளம்: ஆபத்தில் இருக்கும் மக்கள் தங்கள் இருப்பிடத்தின் பிளஸ் கோடு குறியீட்டினை போன் அழைப்பு மூலமாகவோ குறுஞ்செய்தி மூலமாகவோ பகிர்ந்துகொள்ளலாம்.

New Delhi:

மழை வெள்ளத்தால் கேரளத்தின் பல பகுதிகளிலும் இணைய சேவைகள் முடங்கியிருக்கின்றன. அவ்வாறு இருந்தாலும் ஆஃப்லைனிலேயே தங்களது ஆண்டிராய்டு போன்களில் தாம் இருக்கும் இடத்துக்கான “plus code” எனப்படும் குறியீட்டை எடுக்க முடியும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. இக்குறியீட்டின் மூலம் ஒருவர் சிக்கி இருக்கும் இடத்தை மீட்புப்படையினர் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். மக்கள் தங்கள் இடத்தின் பிளஸ் கோடினை போன் அழைப்பு மூலமாகவோ குறுஞ்செய்தி மூலமாகவோ உதவி கோரும்போது பகிர்ந்துகொள்ளலாம்.

இந்த plus code குறீயீடு ஆறு அல்லது ஏழு இலக்கத்தில் எழுத்துகளும் எண்களும் அவற்றுடன் நகரத்தின் பெயரும் இணைந்ததாக இருக்கும். இதனைக் கண்டறிய, கூகுள் மேப்ஸ் செயலியை முதலில் திறக்கவேண்டும். பின்னர், குறிப்பிட்ட இடத்தில் சில நொடிகள் அழுத்தி க்ளிக் செய்யவேண்டும். தற்பொழுது அந்த இடம் செருகப்படும் (pin).

பின்னர் அதில் மேலும் விவரங்களுக்கு address or description, more info போன்ற தேர்வுகளை க்ளிக் செய்து கீழே ஸ்க்ரோல் செய்தால் அவ்விடத்துக்கான பிளஸ் கோடு காணக்கிடைக்கும். சரியான முகவரி தெரியாத போது, கூகுள் மேப்பின் இந்தக் குறியீட்டினை வைத்து முகவரியைக் கண்டறிவது எளிதாகும்.

6i4i56uo

வெள்ளத்தில் சிக்கியுள்ளோரின் குடும்பத்தினரோ மீட்புப் படையினரோ ஒரு இடத்தைக் கண்டறிய கூகுள் மேப்பின் தேடுபெட்டியில் இந்தக் குறியீட்டினை டைப் செய்தால் போதுமானது.

ட்விட்டரும் இம்மாதத் தொடக்கத்தில் இணைய சேவைகள் மெதுவாக இருக்கும்போது அவசரகாலத்தில் தகவல்களைப் பகிர குறைந்த டேட்டாவைக் கொண்டு இயங்கும் ‘ட்விட்டர் லைட்’ சேவையை அறிமுகப்படுத்தியது.

மேலும் ட்விட்டரில் #KeralaFloods #KeralaFloods2018 ஆகிய ஹேஷ்டேகுகளைக் கொண்டும் நிவாரணப்பணிகள், நிவாரண மையங்கள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறியலாம்.

ஃபேஸ்புக்கும் தன் பங்குக்கு தனது “Crisis response page”இல் வெள்ள நிலவரம் பற்றி தகவல்களைத் தொடர்ந்து அளித்து வருகிறது. மேலும் கடந்த வாரம் “Safety Check” என்னும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதையும் ஆபத்தில் இருப்பதையும் தங்களது நண்பர்களுக்குத் தெரிவிக்க முடியும்.

.