Kerala: கேரளா: கேரளாவில் கடந்த ஜூன் மாதம், நிபா வைரஸ் தாக்கியது. அப்போது, நிபா வைரஸ் காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த நர்ஸ் லினியும் வைரஸ் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
நர்ஸ் லினி மக்களுக்காக உயிர் தியாகம் செய்ததை அடுத்து, கருணை அடிப்படையில் அவரது கணவர் சஜேஸிற்கு கேரள அரசு சார்பில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி முதல் கேரளாவில் தொடர் மழை பெய்து வருவதால், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரையில், 324 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், நர்ஸ் லினியின் கணவர் சஜேஸ், தனது முதல் மாத ஊதியத்தை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அளித்துள்ளார். இதுகுறித்து என்.டி டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், தனது மனைவி லினியின் உயிர் தியாகத்தை குறித்து பெருமைப்படுவதாக தெரிவித்தார். மேலும், குழந்தைகளை நன்கு கவனித்து கொள்ள வேண்டும் என்று லினி விரும்பியதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மறைந்த நர்ஸ் லினியின் தியாகமும், அவரது கணவர் சஜேஸின் உதவியும் அனைவரின் மனதையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.