கேரளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டபோது.
New Delhi: வெள்ளத்தால் ஏற்பட்ட இன்னல்களில் இருந்து கேரள மக்கள் மீண்டெழ ஓணம் திருநாள் புத்தெழுச்சியை அளிக்கட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரளத்துக்குப் பின்னால் நாடே உறுதுணையாக நிற்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கேரள மக்கள் கடந்த சில நாட்களாகச் சந்தித்து வரும் இன்னல்களில் மீண்டு வர இந்த ஓணம் திருநாள் அவர்களுக்கு புத்தெழுச்சியை அளிக்கட்டும். ஒட்டுமொத்த இந்தியாவும் கேரள மக்களுடன் தோளோடு தோள் சேர்ந்து நிற்பதுடன் அவர்கள் மகிழ்ச்ச்சியடையவும் வளத்துடன் வாழவும் பிரார்த்திக்கிறது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
ஆகஸ்ட் 8 முதல் இரண்டாம் கட்டமாகப் பெய்த பருவமழைக்கு 231 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. பல இலட்சம் மக்கள் இன்னும் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் நிவாரண முகாம்களில் உள்ளனர்.