This Article is From Aug 24, 2018

கேரள வெள்ளம்: நிவாரண நிதி திரட்ட கேரள அரசின் ‘ஆஸ்வாஸ்’ சிறப்பு லாட்டரி திட்டம்

வெள்ள நிவாரணத்திற்கு நிதி திரட்டுவதற்காக சிறப்பு லாட்டரியினை கேரள அரசு அறிவித்துள்ளது.இலாபம் அனைத்தும் முதல்வர் நிவாரண நிதியில் சேர்க்கப்படும்

Advertisement
தெற்கு Posted by

வெள்ள நிவாரணத்திற்கு நிதி திரட்டுவதற்காக சிறப்பு லாட்டரியினை கேரள அரசு அறிவித்துள்ளது. இதில் ஈட்டப்படும் இலாபம் அனைத்தும் முதல்வர் நிவாரண நிதியில் சேர்க்கப்படும் என்று நிதி அமைச்சர் தாமஸ் ஐசாக் தெரிவித்துள்ளார்.

“இந்த லாட்டரி திட்டத்துக்கு “ஆஸ்வாஸ்” (Ashwas) என்று பெயரிட்டுள்ளோம். ஒரு லாட்டரிச் சீட்டின் விலை 250 ரூபாய். இதன் முடிவுகள் அக்டோபர் 3 அன்று அறிவிக்கப்படும். ஒவ்வொரு சீரிசிலும் அதிகபட்ச பரிசாக ஒரு இலட்சம் வெல்லலாம். 10,80,000 சீட்டுகளுக்கு தலா 5000ரூபாய் பரிசாகக் கிடைக்கும்” என்றும் அவர் கூறினார்.

“நூறு கோடி ரூபாய் திரட்டுவதே இச்சிறப்பு லாட்டரித் திட்டத்தின் நோக்கம். அனைத்துச் சீட்டுகளும் விற்றுத் தீர்ந்தால் செலவுகள் போக, 100 கோடி ரூபாய் தொகை அரசுக்கு இதில் இலாபமாகக் கிடைக்கும்” என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 370 பேர் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். பத்து இலட்சம் பேர் இன்னும் நிவாரண முகாம்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement