Read in English
This Article is From Aug 20, 2018

கேரள வெள்ளம்: மகாராஷ்டிராவில் இருந்து நூறு மருத்துவர்கள் கொண்ட குழு கேரளா புறப்பட்டது

நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் மழையால் கேரளா பெரும் பாதிப்படைந்துள்ள நிலையில் அம்மாநிலத்துக்கு 20 கோடி நிதி உதவி அளிப்பதாகவும் மகாராஷ்டிரா அரசு உறுதி அளித்துள்ளது.

Advertisement
இந்தியா

நூறு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய குழு ஒன்று மகாராஷ்டிராவில் இருந்து இன்று கேரளா புறப்பட்டுள்ளது.

Mumbai:

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து நூறு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் கொண்ட மருத்துவக் குழு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ கேரளா விரைந்துள்ளது. இந்திய வான் படைக்குச் சொந்தமான இரண்டு விமானங்களில் அவர்கள் திருவனந்தபுரத்துக்குச் செல்கின்றனர்.

இவர்களுடன் மகாராஷ்டிர கல்வித்துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன் அவர்களும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடச் சென்றுள்ளனர்.

மகாராஷ்டிர அரசு ஏற்கனவே கேரள நிவாரணப் பணிகளுக்கு 20 கோடி நிதி உதவி அளித்துள்ளது. மேலும் முப்பது டன் அளவுக்கு உணவுப்பொருட்கள், பால் பவுடர், போர்வைகள், உடைகள், சோப்புகள், நாப்கின்கள் ஆகிவற்றை கேரள அரசு கேட்டுக்கொண்ட பட்டியலின்படி அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement