This Article is From Aug 23, 2018

நிவாரண முகாம்களை நேரில் பார்வையிட உள்ள கேரள முதல்வர்! #LiveUpdates

காலை 9:50- கடந்த 8 ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் பெய்து வரும் மழையால் இதுவரை 237 பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

நிவாரண முகாம்களை நேரில் பார்வையிட உள்ள கேரள முதல்வர்! #LiveUpdates
New Delhi/Thiruvananthapuram:

கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் தேங்கியிருந்த வெள்ள நீர், மெல்ல வடியத் தொடங்கியுள்ளது. மக்கள் மெதுவாக வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், நிவாரண முகாம்களை இன்று நேரில் பார்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்து 700 கோடி ரூபாய் வாங்குவது குறித்து கேரள அரசுக்கும் மத்திய அரசுக்கும் முரண்பாடு வந்துள்ளது. இந்நிலையில், 2016 தேசிய பேரிடர் மேலாண்மைத் திட்டத்திற்குக் கீழ் நிதிக்கு ஒப்புதல் அளிக்குமாறு கேரள அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. 

ஆனால், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போது இருக்கும் சட்ட நடைமுறைகள்படி, நிவாரணங்களுக்கானத் தேவையை உள்நாட்டிலிருந்தே பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரள வெள்ளம் குறித்த லைவ் அப்டேட்ஸ்:

மதியம் 12:42- கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிகர், கேரள வெள்ள நிவாரணத்துக்கு 5 கோடி ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளார். இந்த நிதி கேரள முதல்வர் நிவாரண நிதிக்கான வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 11:18- நிவாரண முகாம்களை நேரில் சென்று பார்வையிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன்.

636706199067215740.

காலை 10:38- கேரள வெள்ள நிவாரணத்துக்காக 15 லட்ச ரூபாய் நிதி சேகரித்துள்ள தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மோகன் லால். 

காலை 9:50- கடந்த 8 ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் பெய்து வரும் மழையால் இதுவரை 237 பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 8:34- ஐக்கிய அரபு அமீரகம், 700 கோடி ரூபாய் கொடுக்க சம்மதித்துள்ள நிலையில், கத்தார் 35 கோடி ரூபாய் நிதியுதவி செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. மாலத் தீவுகள் 35 லட்ச ரூபாய் தரவும் சம்மதம் தெரிவித்துள்ளது. 

30 லட்சம் இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அதில் 80 சதவிகிதத்தினர் மலையாளிகள் என்று கூறப்படுகிறது. 

காலை 8:28- கேரள முதல்வர் பினராயி விஜயன், செங்கனூர், கோழஞ்சேரி, ஆலப்புழா, வடக்கு பரவூர், சாலக்குடி ஆகிய இடங்களில் இருக்கும் அவரச நிவாரண முகாம்களை இன்று பார்வையிடுவார் என்று தெரிகவிக்கப்பட்டுள்ளது.

.