This Article is From Aug 17, 2018

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கவும்: உச்சநீதிமன்றம்

கேரள அரசு மேற்கொண்டு வரும் பேரிடர் மேலாண்மைப் பணிகள், மறுவாழ்வுப் பணிகள் குறித்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு.

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைப்பது குறித்து பரிசீலிக்கவும்: உச்சநீதிமன்றம்

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாக குறைப்பதற்கான சாத்தியப்பாடுகளை அறியுமாறு உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

கேரளத்தில் வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க இணைந்து செயல்படுமாறு தேசிய நெருக்கடி மேலாண்மை ஆணையத்தையும் கேரள அரசு அமைத்துள்ள துணை-ஆணையத்தையும் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தைத் தற்போதுள்ள 142 அடியில் இருந்து 139 அடியாக குறைப்பது பற்றியும் பரிசீலிக்குமாறு கூறியது.

வீடிழந்து தவிப்போரின் மறுவாழ்வுப் பணிகள் மற்றும் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடிக்குக் குறைப்பது ஆகியவற்றில் தேசிய நெருக்கடி மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தல்படி நடக்குமாறு தமிழக, கேரள அரசுகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா & டி ஒய் சந்திரசூத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கேட்டுக்கொண்டது.

இதுபோன்ற கடும் இயற்கைச் சீற்றங்களைக் கையாளும் அளவுக்கு தமக்கு அதில் நிபுணத்துவம் இல்லை என்ற நீதிபதிகளின் அமர்வு, அத்தகைய அனுபவமுடைய அரசு நிர்வாகங்களே இதைக் கையாளட்டும் என்று கூறியுள்ளது.

கேரள அரசு மேற்கொண்டு வரும் பேரிடர் மேலாண்மைப் பணிகள், மறுவாழ்வுப் பணிகள் குறித்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கேரளாவில் பெய்து வரும் கடுமையான பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம், நிலச்சரிவுகளில் இதுவரை 167 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

பெரியாற்றில் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் முல்லை பெரியாறு, செறுதோணி, இடுக்கி அணை, இடமலையாறு ஆகிய பல அணைகளும் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் அடிவாரங்களில் வசிப்போரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.