Read in English
This Article is From Aug 20, 2018

கேரள வெள்ளம்- மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு சன்மானம் #LiveUpdates

கேரளாவில் மழை படிப்படியாக குறைந்துள்ளதாகவும், வெள்ள நீர் வடியத் தொடங்கி இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Advertisement
இந்தியா Posted by

ஒரு வழியாக கேரளாவில் மழை ஓய்ந்தது. அனைத்து மாவட்டங்களில் இருந்து ரெட் அலர்ட் நீக்கப்பட்டது. மழை படிப்படியாக குறைந்துள்ளதாகவும், வெள்ள நீர் வடியத் தொடங்கி இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளது. வானிலையில் முன்னேற்றம் இருந்தாலும், இன்னும் ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட வேண்டி இருக்கிறது. சில முகாம்களில் நோய் தொற்று பரவி உள்ளது. ஆனால், பெரிய அளவில் நோய் பாதிப்புகள் ஏதும் இல்லை. தினமும், நோய் பரவல் இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

13.45: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் கேரள வெள்ள நிவாரணத்துக்கு உதவி செய்ய இருப்பதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

13.30: இடுக்கி மாவட்டத்தில் ஏ.டி.எம் சேவை தொடங்கியது. தொலை தொடர்பை சீர் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

13.00: 3757 மருத்துவ முகாம்கள் கேரளாவில் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். 90 வகையான மருந்துகள் தேவைப்படுகிறது. உடனடி மருத்துவ உதவிக் குழுக்கள் வெள்ளம் வடிந்த உடனேயே பணிகளைத் தொடங்கும் எனவும், தினமும் நோய் பரவல் இருக்கிறதா என்பதை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

12.30: கடந்த 24 மணி நேரமாக மத்திய கேரளாவில் இருக்கும் திருச்சூரில் மழை இல்லை. இதனால், மக்கள் மறுபடியும் அவர்களின் வீடுகளுக்கும் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

12.00: மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, பிளம்பிங் மற்றும் மர வேலைகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவை. எங்களுக்கு உடைகள் வேண்டாம்.தொழில் நுட்பமான வேலைகளை செய்யும் ஆட்கள் தேவை. அவர்களால் தான் கேரளாவை இயல்பு நிலைக்கு கொண்டு செல்ல முடியும் - கே.ஜே.அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

11.30: மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. ஒரு நாள் படகு மூலம் செய்யப்பட்ட சேவைக்கு 3000 ரூபாய் வழங்கப்படும் என்றும், மீட்புப் பணியின் போது ஏற்பட்ட படகு பழுதுகளின் செலவையும் அரசு ஏற்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

Advertisement