Read in English
This Article is From Aug 22, 2018

மருந்துகள் எடுத்துச் சென்ற ராணுவம்… கரகோஷம் எழுப்பிய கேரள மக்கள்… நெகிழ்ச்சி வீடியோ!

இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, இந்திய ராணுவத்தின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது

Advertisement
விசித்திரம்

கேரள மாநிலத்தில் மழையின் தாக்கம் குறைந்து வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. ஆனால், அடுத்தடுத்து பல சவால்களை சந்திக்கத் தயாராகி வருகிறார்கள் கேரள மக்கள். ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினருடனும் மீனவ மக்களுடனும் இணைந்து தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

கொசுத் தொல்லையும், நோய் தொற்றும் அடுத்து வரும் நாட்களில் அங்கு அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் ராணுவத்தினரின் செயல்களை இந்திய ராணுவம் தனது சமூக வலைதள பக்கங்களில் வீடியோவாக வெளியிட்டு வருகின்றது. 
 

இந்நிலையில் சந்தேன்கெரியில் முட்டிக்கால் அளவு இருக்கும் வெள்ள நீர் உள்ள ஒரு இடத்தில் ராணுவத்தினர், பெட்டிப் பெட்டியாக மருந்துகள் எடுத்துச் செல்கின்றனர். ராணுவ வீரர்களைச் சுற்றியுள்ள மக்கள், இந்தச் செயலுக்கு நன்றியுணர்வுடன் கை தட்டி செயலைப் பாராட்டுகின்றனர். 

இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, இந்திய ராணுவத்தின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதையடுத்து, பலர் இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். 

Advertisement


 

Advertisement