This Article is From Aug 19, 2018

மழை குறைய வாய்ப்பு; ரெட் அலர்ட் திரும்பப்பெறப்பட்டது, தொடரும் மீட்புப் பணிகள்

மழை குறைய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்ததால் ரெட் அலர்ட் நீக்கப்பட்டு பல மாவட்டங்களிலும் ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை குறைய வாய்ப்பு; ரெட் அலர்ட் திரும்பப்பெறப்பட்டது, தொடரும் மீட்புப் பணிகள்

11 மாவட்டங்களில் இன்றைக்கு மட்டும் ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பெய்து வரும் பேய்மழைக்கு இதுவரை 357 பலியாகியுள்ளனர். இலட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளி அன்று வெள்ளப்பகுதிகளை ஹெலிகாப்டரில் பிரதமர் பார்வையிட்டார். தற்போது வெளியாகியுள்ள செய்தியின்படி திங்கள் முதல் பலத்த மழை இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், காசர்கோட் தவிர பிற மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமரைக் கோரியுள்ளார். அரிசி, குடிநீர் அடங்கிய சிறப்பு இரயில்கள் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொச்சி விமான நிலையத்தில் வெள்ளம் இன்னும் வடியாததால், தற்காலிகமாக கடற்படையின் திட்டில் இருந்து பயணிகள் விமானம் திங்கள் முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள வெள்ளம் குறித்த லைவ் அப்டேட்டுகள்:

11:15 கேரள மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கான அவசர உதவி எண்கள் அடங்கிய பட்டியல். இதில் கட்டுப்பாட்டு அறைகளின் தொலைபேசி எண்கள், மொபைல் எண்கள், தொலைநகல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

10:54 கேரள விவசாயத்துறை அமைச்சர் வி.எஸ். சுனில்குமார் வெள்ளச்சேதத்தின் மதிப்பு 20,000 கோடி ஆகியுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் அவர், இத்தகைய பேரழிவு ஏற்படக் காரணம் என்ன என்பதுபற்றி அறிய மணற்பரப்புகள் ஆய்வு செய்யப்படும் எனவும் அறிவித்தார்.

10:44 மும்பையிலுள்ள மக்கள் கேரளாவுக்கு அனுப்ப அத்தியாவசிய பொருட்களை சேகரித்து வரும் காட்சி.

10:38 இன்று காலை, பாலக்காடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை மீட்கும் அதிரடிப்படையினர் மீட்டனர்.

10:35 கேரளத்தின் எல்லா மாவட்டங்களிலும் பிறப்பிக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டது. பத்து மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட்டும், இரண்டு மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட்டும் (பொதுமக்களுக்கு உடனடி பாதிப்பை ஏற்படுத்தாத, குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும்) அறிவிக்கப்பட்டுள்ளது.

10:28 கருவன்னூர் ஆற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டதால் திரிச்சூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. பரியாராத்தில் உள்ள பெருங்கல்கொத்து அணையின் கதவுகள் மூட முடியாததால் இராணுவத்தினர் இன்று காலை ஆய்வு செய்ய சென்றுள்ளனர்.

10:23 “கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு இந்தியா முழுதும், சிகாகோ வரையிலும் உலகெங்கிலும் உணரப்பட்டுள்ளது” என்று அமெரிக்கப் பேரவை உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி அதிகாரபூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

9:51 அமிதாப் பச்சன் ட்வீட்: கேரளத்தில் இடைவிடா மழையால் ஏற்பட்டுள்ள பேரழிவு அச்சப்பட வைக்கிறது. இலட்சக்கணக்கான நமது சகோதர சகோதரிகள் கடும் துயரத்தில் உள்ளனர். நம்மால் முடிந்தவரை கேரள மக்களின் தேவைக்கு உதவுவோம். நான் செய்துவிட்டேன், நீங்களும் கட்டாயம் செய்ய வேண்டும்.

9:47 14,000 லிட்டர் குடிநீர் அடங்கிய சிறப்பு இரயிலை மத்திய இரயில்வே கேரளாவுக்கு அனுப்பியுள்ளது.

9:31 காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின்பேரில் நாடெங்கும் உள்ள அக்கட்சியின் எம்.பிக்கள் பஞ்சாப் எம்.எல்.ஏ-க்கள் தமது ஒரு மாத ஊதியத்தை கேரள நிவாரண நிதிக்கு அளிக்கவுள்ளனர் அக்கட்சி செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

9:09 மகாரஷ்டிரா மாநில காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தங்கள் ஒரு மாத ஊதியத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாகத் தகவல்.

9:06 இந்திய வர்த்தக பைலட்டுகள் பேரவையினர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இலவசமாக விமானங்களை இயக்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் செலுத்த:

NO: 67319948232 

Bank: State Bank of India   

IFSC : SBIN0070028 

SWIFT CODE : SBININBBT08

 

 

.