கேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் பெங்களூரிலிருந்து கொச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஹைலைட்ஸ்
- 180 கிலோ தங்கம் கடத்தப்பட்டதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்
- சந்தீப் நாயர் மற்றும் ரமீஸ் உள்ளிட்ட மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களாவர்கள்
- இந்தியாவை விட்டு வெளியேறிய அரபு எமிரேட் தூதர் இந்த வழக்கில் முக்கியமானவர்
Thiruvananthapuram: கேரள அரசியலில் தங்கக் கடத்தல் வழக்கு தற்போது புயலைக் கிளப்பியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இரு முக்கிய குற்றவாளிகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் நகரத்தின் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று தடயங்களை சேகரித்தனர். குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித் ஆகியோர், அவர்களது அலுவலகம் மற்றும் வீடுகளுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கப்பட்டனர்.
“இந்த தூதரக பாதை வழியாக 180 கிலோ தங்கம் கடத்தப்பட்டதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். அதை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம், ஆனால் கடத்தப்பட்ட மொத்த தொகை இன்னும் அதிகமாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.” என விசாரணை அதிகாரி ஒருவர் என்டிடிவிக்கு தெரிவித்துள்ளார். மேலும், இந்த வழி 12 முதல் 13 முறை வரை பயன்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வகையான கடத்தல் வழிமுறையை ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித் இருவரும் கண்டறிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சந்தீப் நாயர் மற்றும் ரமீஸ் உள்ளிட்ட மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த கடத்தலுக்கு பக்கபலமாக இருந்துள்ளனர்.
”இந்தியாவை விட்டு வெளியேறிய ஐக்கிய அரபு எமிரேட் தூதர் இந்த வழக்கில் முக்கியமானவர்.” என விசாரணையில் ஈடுபட்ட ஒரு மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
இம்மாதிரியான உயர்ந்த இடங்களில் தொடர்பு இருந்த காரணத்தினால்தான், தூதரின் பைகளை செயல் தூதரகம் முன் திறக்க வெளிவிவகார அமைச்சகத்திடமிருந்து அனுமதி பெறப்பட்டது. “இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக அவர் இரண்டு முறை அழைக்கப்பட்டார். அவரது பெயரிலோ அல்லது துணைத் தூதரகத்தில் ஜூனியர் அதிகாரிகளிலோ பல பைகள் பெறப்பட்டுள்ளன. எனவே இது குறித்து ஆழமாக ஆராயப்பட வேண்டும்.” என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஜூன் 25 முதல் ஜூலை 3 வரை மூன்று பைகள் விரைவாக அடுத்தடுத்து பெறப்பட்டன என அதிகாரிகள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட் தூதர் கடந்த வாரம் டெல்லி வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
மற்றொரு குற்றம் சாட்டப்பட்ட பைசல் ஃபரீத் மீது புளூ கார்னர் நோட்டீஸ் வழங்குமாறு என்ஐஏ இன்டர்போலைக் கோரியுள்ளது என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ் கேரள மாநில தகவல் உள்கட்டமைப்பு லிமிடெட் கீழ் விண்வெளி பூங்கா திட்டத்தில் பணிபுரிந்தார். இது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன.
ஆனால், ஸ்வப்னா தனியார் நிறுவனத்தில் ஒப்பந்தத்தில் பணிபுரிந்தார் என்றும் அவர் அரசு ஊழியர் அல்ல என்றும் முதல்வர் பினராயி விஜயன் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், குற்றச்சாட்டுகள் வெளிவந்தவுடன் அவரது ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியது.
விஜயனின் அலுவலகம் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றியது என்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டியுள்ள நிலையில், விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கர் சேவைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை முதல்வர் அலுவலகம் மறுத்துள்ளது. "இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களையோ அல்லது தொடர்புள்ள எவரையும் இந்த அரசாங்கம் பாதுகாக்கப் போவதில்லை.” என முதல்வர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியான யுடிஎஃப் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க உள்ளது.