This Article is From Jul 18, 2018

கேரளாவில் 'ஜெயில் சுற்றுலா' - 24 மணி நேரத்திற்கு பொதுமக்கள் சிறையில் தங்கும் வாய்ப்பு

ஜெயில் அனுபவத்தை பொது மக்கள் பெற்று கொள்ள கேரளா சிறை துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது

கேரளாவில் 'ஜெயில் சுற்றுலா' - 24 மணி நேரத்திற்கு பொதுமக்கள் சிறையில் தங்கும் வாய்ப்பு
Thiruvananthapuram:

திருவனந்தபுரம்: ஜெயில் அனுபவத்தை பொது மக்கள் பெற்று கொள்ள கேரளா சிறை துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது

'பே அண்டு ஸ்டே'  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள விய்யூர் மத்திய சிறையின் ஒரு பகுதியை 'ஜெயில் அருங்காட்சியகம்' அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், பொது மக்கள் 24 மணி நேரம் சிறை வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் ஜெயில் அனுபவத்தை பெறலாம். தங்குபவர்களுக்கு சிறை உணவு வழங்கப்படும் என சிறை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கான கட்டணம் இன்னும் உறுதியாக நிர்ணையிக்கப்படவில்லை. "மாநில அரசின் ஒப்புதலுக்காக இந்த திட்டம் குறித்த விவரங்களை அரசிடம் சமர்பித்துள்ளோம்." என்று சிறை காவல் துறை தலைமை இயக்குனர் ஶ்ரீலேகா தெரிவித்தார்.

சிறை அருங்காட்சியகம் அமைக்க திட்ட குழு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான, 3 கோடி ரூபாய் நிதியும் 2018-19 ஆண்டிற்கான முதல் நிலையில் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மாநிலத்தின் முன்னனி ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

"மாநிலத்தில் 54 சிறைகள் உள்ளன. முக்கியமான தொல் பொருட்கள் சிறை வளாகத்தில் உள்ளது. அவற்றை கொண்டு அருங்காட்சியகம் அமைப்பது சிறப்பாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

சென்னை சார்ந்த கட்டிட கலைஞர், கேரளாவை சேர்ந்த நிர்மிதி கேந்திரா ஆகியோர் இணைந்து சிறை அருங்காட்சியகத்தை வடிவமைக்க உள்ளனர். "6 கோடி ரூபாய் திட்டத்திற்கு, 3 கோடி ரூபாய் நிதிக்கு அனுமதி கிடைத்துள்ளது. மேலும், சிறை அருங்காட்சியகத்தில் மக்கள் விரும்பும் கஃபேடேரியா, நூலகம், ஒளி ஒலி நிகழ்ச்சிகள் செய்ய திட்டங்கள் உள்ளது" என்று விய்யூர் மத்திய சிறை கண்கானிப்பாளர் வினோத் குமார் தெரிவித்தார்.

'ஜெயில் சுற்றுலா' திட்டம் தெலுங்கான மாநிலத்தில் ஏற்கனவே இயங்கி வருகிறது என்பது கூடுதல் தகவல். 220 ஆண்டுகள் பழைமையான சிறையை, பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 500 ரூபாய் கட்டணத்திற்கு 24 மணி நேரம் சிறையில் தங்க அனுமதி அளிக்கப்பட உள்ளது.

'ஃபீல் தி ஜெயில்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில், பொது மக்களுக்கான ஜெயில் சீருடை, உணவு, தட்டு, கிளாஸ், படுக்கும் வசதி அனைத்தும் சிறை செட்-அப்பில் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது

.