This Article is From Jul 29, 2019

போராட்டம் நடத்திய தலித் எம்.எல்.ஏ உட்கார்ந்திருந்த இடத்தை மாட்டு சாணம் தெளித்து 'தூய்மை' படுத்திய காங்கிரஸ்

எம்.எல்.ஏவின் தர்ணா போலியானது அதனை நாங்கள் எதிர்த்தோம். அதற்கும் எம்.எல்.ஏவின் சாதிக்கும் எந்த தொடர்பும் இல்லை -காங்கிரஸ் கட்சியினர்

போராட்டம் நடத்திய தலித் எம்.எல்.ஏ உட்கார்ந்திருந்த இடத்தை மாட்டு சாணம் தெளித்து 'தூய்மை' படுத்திய காங்கிரஸ்

காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவர் கூட அதில் கலந்து கோஷம் எழுப்பியுள்ளார்

Thiruvananthapuram:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு தலித் சட்டமன்ற உறுப்பினர் கீதா கோபி போராட்டம் நடத்தியதை அடுத்து அங்கிருந்த காங்கிரஸ் இளைஞர்கள் அவர் அமர்ந்த  இடத்தை  மாட்டு சாணம் தெளித்து ‘சுத்தப்படுத்திய' விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சாதி அடிப்படையிலான அவமான என்று பலர் தங்களின் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். 

உள்ளூர் சாலைகளின் நிலை குறித்து  கவனத்தை ஈர்க்க சட்டமன்ற உறுப்பினர் பொதுப்பணித்துறை அலுவலகம் முன் அமர்ந்து நீண்ட நேரம் போராட்டம் நடத்தினார். எம்.எல்.ஏ கீதா. இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்தது. 

இது குறித்து கீதா கோபியிடம் NDTVயிடம் பேசியபோது, “இது என்னையும் என் குழந்தைகளையும் வெகுவாக பாதித்தது. அவர்கள் எனக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க நினைத்தால் அதற்கு பல வழிகள் உண்டு. ஆனால் அவர்கள் சாதியை கையில் எடுத்து இத்தகையை செயலை செய்திருக்க கூடாது. காங்கிரஸ் இளைஞர்கள் அந்த பகுதியை மாட்டு சாணம் தண்ணீரால் சுத்தம் செய்தனர். காங்கிரஸ் பஞ்சாயத்து தலைவர் கூட அதில் கலந்து கோஷம் எழுப்பியுள்ளார்” என்று தெரிவித்தார். 

செர்பு பஞ்சாயத்து தலைவர் சி.கே. வினோத் காங்கிரஸ் இளைஞர் அமைப்பின் போராட்டத்தை ஆதாரித்தார். கடந்த காலங்களில் இடதுசாரிகள் மாட்டு சாணத்துடன் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறினார். 

எம்.எல்.ஏவின் தர்ணா போலியானது அதனை நாங்கள் எதிர்த்தோம். அதற்கும் எம்.எல்.ஏவின் சாதிக்கும் எந்த தொடர்பும் இல்லை. பசுசாணம் மற்றும் தண்ணீர் பயன்படுத்தி எதிர்ப்பை இடதுசாரிகளும் பதிவு செய்துள்ளனர். இதை ஒரு சாதிய பிரச்னையாக மாற்றியது அவர்களின் மனநிலையை காட்டுகிறது. பல காலங்களுக்கு முன்பே தீண்டாமை என்பது மறைந்து விட்டது என்றும் தெரிவித்தார். 

.