Read in English
This Article is From Aug 14, 2020

கோழிக்கோடு விமான விபத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட 22 அதிகாரிகளுக்கு கொரோனா!

கடந்த 2010-ல் இது போன்ற விமான விபத்து மங்களூருவில் நடைபெற்றது. அதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இம்மாதிரியான விமான விபத்திற்கு காரணம் டேபிள் டாப் எனப்படும் மலைக்குன்றுகள் மீது அமைந்திருக்கும் விமான ஓடுதளமேயாகும்.

Advertisement
இந்தியா Edited by

கேரள விமான விபத்து: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் 737 மழையின் நடுவே தரை இறங்கிய பின்னர் இரண்டாக உடைந்தது

Highlights

  • மீட்பு பணியில் ஈடுபட்ட 22 விமான நிலைய அதிகாரிகளுக்கு கொரோனா
  • துபாயிலிருந்து 184 பயணிகளுடன் கேரளா வந்தது விமானம்
  • விமானத்தில் பயணித்த விமானி உட்பட 18 பேர் உயிரிழந்தனர்
Thiruvananthapuram:

கடந்த வாராம் கேரள மாநிலம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட 22 விமான நிலைய அதிகாரிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா லாக்டவுன் காரணமாக சர்வதேச பயணிகளுக்கான விமான போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு கொண்டுவர வந்தே பாரத் திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், இதன் ஒரு பகுதியாக துபாயிலிருந்து 184 பயணிகளுடன் கேரளா நோக்கி வந்த விமானம், கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கனமழை காரணமாக விமானம் ஓடுபாதையிலிருந்து வழுக்கிச் சென்று அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது.

இதனால் விமானத்தில் பயணித்த விமானி உட்பட 18 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பயணியில் ஈடுபட்டிருந்த 22 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட மூன்று மணி நேர நடவடிக்கைக்குப் பின்னர் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். விபத்தில் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தப்பியவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர், மேலும் COVID-19 க்கும் பரிசோதிக்கப்பட்டனர்.

Advertisement

கடந்த 2010-ல் இது போன்ற விமான விபத்து மங்களூருவில் நடைபெற்றது. அதில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இம்மாதிரியான விமான விபத்திற்கு காரணம் டேபிள் டாப் எனப்படும் மலைக்குன்றுகள் மீது அமைந்திருக்கும் விமான ஓடுதளமேயாகும்.

Advertisement