This Article is From Aug 20, 2018

கேரள வெள்ள பாதிப்பை கேலி செய்ததால் வேலை பறிபோனது; ஓமனில் அதிரடி

கேரள மாநிலத்தின் அவல நிலையை குறித்து தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டதால், ராகுலை பணி நீக்கம் செய்வதாக லூலூ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது

கேரள வெள்ள பாதிப்பை கேலி செய்ததால் வேலை பறிபோனது; ஓமனில் அதிரடி
Dubai, UAE:

கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி முதல் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கூடாது என்று சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட வாலிபர், வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கனமழை குறைந்து வரும் நிலையில், மீட்பு பணிகள் தீவரமாக நடைப்பெற்று வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கேரள மாநிலத்திற்கு நிவாரணப் பொருட்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஓமன் நாட்டில் உள்ள லூலூ நிறுவனத்தில் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த ராகுல் என்பவர், கேரள மக்களுக்கு உதவ கூடாது என்று முகநூலில் பதிவிட்டுள்ளார்.

வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள பெண்களுக்கு உதவி செய்ய கூடாது எனவும், மக்களுக்கு தேவையான உதவிகளை கேலி செய்தும் பதிவிட்டிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள லூலூ நிறுவனம், ராகுலை பணியில் இருந்து நீக்கியுள்ளது. இயற்கை சீற்றத்தால் தவித்து வரும் கேரள மாநிலத்தின் அவல நிலையை குறித்து தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டதால், ராகுலை பணி நீக்கம் செய்வதாக லூலூ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரலாறு காணாத கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றன.

.