This Article is From Dec 17, 2019

கேரளாவில் கொடூரம்: மொபைல் திருடர் என்ற சந்தேகத்தில் இளைஞர் அடித்துக்கொலை!

திருவள்ளோம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை 7 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கி அவரது பிறப்புறுப்பில் சூடு வைத்துள்ளனர்.

கேரளாவில் கொடூரம்: மொபைல் திருடர் என்ற சந்தேகத்தில் இளைஞர் அடித்துக்கொலை!

அந்த இளைஞரின் பிறப்புறுப்பில் 40 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது. (Representational)

ஹைலைட்ஸ்

  • Man died of burn injuries in Kerala's capital Thiruvananthapuram
  • He was thrashed allegedly by 7 men who burnt his genitals with hot object
  • Attackers accused him of stealing phone, wallet of a man at the bus stand

கேரளாவின் தலைநகரம் திருவனந்தபுரத்தில் பர்ஸ் மற்றும் மொபைல் போன் திருடியதாக சந்தேகத்தின் பேரில் அடித்து துன்புறுத்தப்பட்ட 30 வயது இளைஞர் ஒருவர் தீக்காயங்களுடன் உயிரிழந்தார். 

திருவள்ளோம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை 7 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கி அவரது பிறப்புறுப்பில் சூடு வைத்துள்ளனர். 

திருவனந்தபுரத்தின் பிரதான பஸ் ஸ்டாண்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒருவரின் செல்போன் மற்றும் பர்ஸை திருடியதாக சந்தேகத்தின் பேரில் அந்த நபரை ஆட்டோ ஒட்டுநர்கள் சிலர் சரமாரியாக தாக்கி துன்புறுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதில், அந்த நபர் 40 சதவீதம் தீக்காயம் அடைந்ததாக தெரிகிறது. மேலும், இந்த தீக்காயங்கள் அவரது பிறப்புறுப்பில் ஏற்பட்ட காரணத்தினால் அவர் உயிரிழக்க நேரிட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்றவர்கள் எடுத்த வீடியோ ஆதாரத்தை வைத்து தாக்குதலில் ஈடுபட்ட 7 பேரில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

அவர்கள் நசீர், தினேஷ் வர்கிஷ், அருண், சாஜன் மற்றும் ராபின்சன் ஆகியோர் ஆவர். 

.