This Article is From Nov 13, 2018

''பதவியைக் குப்பையில் தூக்கி போடுவேன்'' கேரள அமைச்சர் மனைவி அதிரடி!

'அமைச்சரின் மனைவி என்பதால் இந்தப் பதவியை இவர் பெற்றுள்ளார்' என்று எழுந்த குற்றச்சாட்டையடுத்து இந்த முடிவை இவர் எடுத்துள்ளார்.

''பதவியைக் குப்பையில் தூக்கி போடுவேன்'' கேரள அமைச்சர் மனைவி அதிரடி!

ஓய்வுக்கு பின் விண்ணப்பித்த இவருக்கு கேரளப் பல்கலைக்கழக்கத்தின் கீழ் விளங்கும் தன்னாட்சி கல்லூரிகளின் இயக்குநர் பதவி வழங்கப்பட்டது.

Thiruvananthapuram:

பல்கலைக்கழக பதவியிலிருந்து விலகுவதாக கேரள அமைச்சரின் மனைவி கூறியிருப்பது கேரளாவில் விவாதமாகியுள்ளது. 'அமைச்சரின் மனைவி என்பதால் இந்தப் பதவியை இவர் பெற்றுள்ளார்' என்று எழுந்த குற்றச்சாட்டையடுத்து இந்த முடிவை இவர் எடுத்துள்ளார். பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் ஜி.சுதாகரனின் மனைவி நவபிரபா மீது எழுந்துள்ள புகாருக்கு அவர், முறைப்படி தான் இந்த வேலையை பெற்றார் என்று அமைச்சரின் மனைவி கூறியுள்ளார். 

மேலும் அவர் '' நான் ஆலப்புழாவில் உள்ள எஸ்டி கல்லூரியில் துணைவேந்தராக இருந்து ஓய்வு பெற்றேன். அதன்பின் இந்த விளம்பரத்தை பார்த்து இந்தப் பல்கலைக்கழக பதவிக்கு விண்ணப்பித்தேன். இப்போது இந்தக் குற்றச்சாட்டை என்னால் ஏற்கமுடியவில்லை. என் கணவரும் நானும் 36 வருங்களாக இணைந்து வாழ்கிறோம். இப்படி ஒரு குற்றச்சாட்டை அவர் மீது சுமத்த அனுமதிக்கமாட்டேன். நான் என் வேலையை குப்பை தொட்டியில் தூக்கி வீச தயார். என் கணவரின் பெயருக்கு கலங்கம் வராமல் இருக்கவே இதை செய்கிறேன்'' என்றார்.

இவர் கூறியபடி ஓய்வுக்கு பின் விண்ணப்பித்த இவருக்கு கேரளப் பல்கலைக்கழக்கத்தின் கீழ் விளங்கும் தன்னாட்சி கல்லூரிகளின் இயக்குநர் பதவி வழங்கப்பட்டது. இதே போன்று ஒரு குற்றச்சாட்டுக்காக 2016ம் ஆண்டு அமைச்சர் ஜெயராஜன் பதவி விலகினார். உறவினர்களுக்கு மாநில அரசு நடத்தும் நிறுவனங்களில் பதவிகளை வழங்கினார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதுதான் அதற்கு காரணமாக இருந்தது. 

.