This Article is From Jun 15, 2018

கேரள கனமழை எதிரொலி: பலி எண்ணிக்கை உயர்வு!

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், மழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

கேரள கனமழை எதிரொலி: பலி எண்ணிக்கை உயர்வு!

ஹைலைட்ஸ்

  • கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது
  • நேற்று ஒரே நாளில் மட்டும் 19 பேர் இறப்பு
  • 18-ம் தேதி வரை மழை தொடரும் என அறிவிப்பு
Thiruvananthapuram:

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், மழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 19 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43-ஐத் தொட்டுள்ளது.

கேரள மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களான கோழிக்கோடு, வயநாடு, கன்னூர், பாலக்காடு, கசரகோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை காரணமாக ஆபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் வரும் 18 ஆம் தேதி வரை கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

நேற்று கோழிக்கோட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். நிலச்சரவில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளும் அடங்குவர் என்று தகவல் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், கடந்த இரு நாட்களில் வடக்கு மாவட்டங்களில் இருந்த 18 பேர் காணாமல் போயுள்ளதாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. பல உள்ளூர் சாலைகள், சில தேசிய நெடுஞ்சாலைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கன்னூர் பகுதிகளின் பல்வேறு வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. 

கேரளாவின் இருக்கும் பெரும்பான்மை அணைகளின் நீரளவு அதன் உச்சத்தைத் தொட்டுள்ளன. அதபோல, ஆறுகளின் நீர் அளவும் அதிகரித்துள்ளன. கேரள முதல்வர் பினராயி விஜயன், தலைமைச் செயலாளரை மழை பாதிக்கப்பட்ட இடங்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக செய்து கொடுக்கும்படி ஆணையிட்டுள்ளார்.

.