பள்ளி கல்லூரி நிர்வாக ஆடை குறித்த வரைமுறையினை தாங்களே வரையறுத்துக் கொள்ளலாம் என்று கேரளா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது(Representational)
Thiruvananthapuram: கேரளாவில் கோழிக்கோட்டை தலைமையகமாக வைத்து செயல்படும் முஸ்லீம் கல்வி குழுமம் இனி பள்ளி வளாகத்திற்குள் முகத்தை மறைக்கும் வண்ணம் புர்கா அணியக் கூடாது என்று சுற்றறிக்கை விடுத்துள்ளது.
முஸ்லீம் கல்வி குழுமம் பல பள்ளி, கல்லூரிகளை நடத்தி வருகிறது. தன்னுடைய குழுமத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளி கல்லூரிக்கும் இந்த விதிமுறை 2019-2020 கல்வியாண்டு முதல் செய்ல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. முகத்தை மறைக்கும் கலாச்சாரம் சமீபத்தில் வந்த நடைமுறை இதற்கு முன்பு கேரளத்தில் புர்கா முறை வழக்கமல்ல என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முஸ்லிம் கல்வி குழுமத்தி தலைவர் பிகே. ஃபாசல் கஃவர் எந்தவொரு பிரச்னைகளும் உருவாக வண்ணம் இந்த விதிமுறை வரும் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த விதிமுறையை திரும்ப பெற வேண்டுமென பலரும் கேட்டுக் கொண்டுவருகின்றனர்.
உயர் நீதிமன்ற ஆணைப்படி அந்த கல்வி நிறுவனம் தங்களுக்குக்கான ஆடை விதிமுறைகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. அதன்படி எங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முகத்தை மறைக்கும் புர்கா ஆகிய உடைகளை அணியத் தடைவிதித்துள்ளோம் என்று NDTVயிடம் தெரிவித்தார்.
முகத்தை மறைக்கும் கலாச்சாரம் கேரளாவில் பின்பற்றப்பட்டது கிடையாது. கேரள பாரம்பரிய நம்பிக்கையும் இது இல்லை. முகத்தை மறைத்துக் கொள்வதால் ஆசிரியர்களால் மாணவர்களை அடையாளம் காணமுடியவில்லை என்று தெரிவித்தார். புர்கா அணிவது மத அடிப்படைவாதத்தின் பெயரில் திணிக்கப்பட்ட ஆடைக் குறியீடு அதை முஸ்லீம் கல்வி குழுமம் பின்பற்றத் தயாராகயில்லை என்று தெரிவித்தார்.
முஸ்லீம் அறிஞர்கள் இந்த விதிமுறை திரும்பப் பெறவேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் குண்டு வெடிப்புக்குப் பின் நாட்டின் பாதுகாப்பு கருதி முகத்தை மறைக்கும் புர்காவிற்கு தடைவிதித்துள்ளது.