கொலை முயற்சியில் ஈடுபட்ட நிதின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. (Representational)
Thiruvananthapuram: திருவனந்தபுரத்தில் மருத்துவமனை செவிலியர் ஒருவர் தாக்கப்பட்டார். மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரியும் நபர் கொலை வெறித்தாக்குதலுடன் நடத்திய வன்முறையில் அந்த பெண்ணின் காது அறுபட்டுள்ளது.
39 வயதான் பெண் கிட்டத்தட்ட 35 வயதான ஒட்டுநரால் காலை 7 மணியளவில் தாக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உடனடியாக அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையும் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கழுத்து மற்றும் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது ஒரு கொலை முயற்சிதான் மூன்று அல்லது நான்கு இடங்களில் தீவிரமான காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணுக்கும் கொலை முயற்சி செய்த ஆணுக்கும் இதற்கு முன்பே தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. கொலை முயற்சியில் ஈடுபட்ட நிதின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
கேரளாவில் திருவல்லா நிகழ்ச்சியை ஒட்டி 18 வயதான பெண்ணை காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறி தீ வைத்து கொளுத்திய சம்பவமும் இதற்கு முன் நடந்துள்ளது. 60 சதவீத தீக்காயங்களுடன் இருந்த பெண் மறுநாள் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.