கேரள வெள்ளத்தால் 19,500 கோடி ரூபாய்க்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது
New Delhi: கேரளாவில் வெள்ளம் ஏற்பட முல்லை பெரியாறு அணையில் அதிக அளவு நீர் தேக்கி வைத்ததும் ஒரு காரணம் என கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளாது. முல்லை பெரியாறில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால், இடுக்கி அணையில் நீர் அளவு அதிகரித்து, அந்த அணையையும் திறந்து விட வேண்டிய நிலை ஏற்பட்டதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.
மேலும், "136 அடிக்கு நீர் இருக்கும்போதே கொஞ்சம் கொஞ்சமாக திறந்து விடக் கூறிக் கேட்டுக் கொண்டோம். 139 அடி வந்த போதும் கேட்டோம். ஆனால், தமிழகம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை" என்று கேரள தலைமைச் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பு, கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டு ஒரு வாரத்துக்கு பிறகு, ஆகஸ்ட் 16-ம் தேதி நீர் திறக்கப்பட்டதாகவும், இதனால் வெள்ளத்துக்கு தமிழகம் காரணம் அல்ல என்றும் வாதிட்டது.
இன்று தாக்கல் செய்யப்படும் பதில் மனுவில், உச்ச நீதிமன்றம் முல்லை பெரியாறு அணையின் நீர் அளவை 142 அடி வரை தேக்கி வைக்கலாம் என்று அனுமதி தந்து உத்தரவிட்டதை தமிழக அரசு முன்வைக்கும் என்று தெரிகிறது.
கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் முல்லை பெரியாறு விவகாரத்தில் நீண்ட் காலமாக சர்ச்சை நிலவி வருகிறது. அந்த அணை வலுவாக இல்லை என்றும், நீர் கசிவு இருப்பதாகவும் கேரளா அவ்வப்போது வழக்குகளை போட்டு வந்தது. ஆனால், இறுதியாக உச்ச நீதிமன்றம் அணை வலுவாக இருப்பதாகவும், 142 அடி வரை நீரை தேக்கி வைக்க அனுமதி அளித்தும் உத்தரவிட்டது. 1886 ஆண்டு பிரிட்டிஷ் அரசுக்கும், திருவாங்கூர் மஹாராஜாவுக்கு இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, இந்த அணையை தமிழக அரசு பராமரித்து வருகிறது.
(Kerala has to rebuild itself after the worst floods in over a century. Hundreds have died and lakhs are homeless. Here is how you can help.)