বাংলায় পড়ুন Read in English
This Article is From Aug 08, 2020

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் போதுமான அளவு ஏரிபொருள் இருந்தது; ஹர்தீப் சிங் பூரி

இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 127 பேர் காயமடைந்துள்ளனர். 

Advertisement
இந்தியா Posted by
Kozhikode:

துபாயில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு 7.41 மணிக்கு கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்பொழுது விபத்தில் சிக்கியது. இதில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், வேறு இடத்தில் தரையிறங்கும் அளவு ஏரிபொருள் இருந்ததாக விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 

இந்த விபத்தில் இரண்டு விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 127 பேர் காயமடைந்துள்ளனர். 

இன்று பிற்பகல் கோழிக்கோடு சென்றடந்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மூத்த அதிகாரிகள் மற்றும் நிபணர்களுடன் கலந்துரையாடுவதாக தெரிவித்துள்ளார். தேசிய விமான கண்காணிப்புக் குழுவான சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் குழு ஏற்கனவே விபத்துக்குள்ளான இடத்தை அடைந்துள்ளது. இந்த விமான நிலையம் கேரளாவின் மிக முக்கியமான சர்வதேச முனையங்களில் ஒன்றாகும். 

Advertisement

கருப்பு பெட்டி (DFDR) மற்றும் உரையாடலை பதிவு செய்த காக்பிட் கருவியும் (CVR) - ஒரு விமானத்தின் செயல்திறன், வேகம், பிரேக்கிங் மற்றும் கணினி நிலை பற்றிய தகவல்கள் மற்றும் இடையிலான உரையாடல்களின் பதிவுகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தரவுகளை இவை சேமித்து வைக்கிறது. IX-1344 விமானத்திற்கு என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள விமானப் புலனாய்வாளர்களுக்கு உதவுவதில் இவை முக்கியமானவை ஆகும்.

விமானங்கள் தொடர்பான FlightRadar24 என்னும் இணையதளம், ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு முன்னர் பல முறை வட்டமடித்துள்ளது. இரு முறை தரையிறங்க முயன்றுள்ளது' என்கிற அதிர்ச்சித் தகவலை தெரிவிக்கிறது. 

Advertisement

கோழிக்கோடு விமான நிலையம், ‘டேபிள் டாப்' விமான நிலையம் என்று சொல்லப்படுகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், டேபிள் டாப் விமான நிலையத்தின் ரன்வே, மலை மீதோ, உயரமான பகுதி மீதோ இருக்கும். ரன்வே தாண்டி சென்றால் பள்ளம் இருக்கும். இதைப் போன்ற விமான நிலையங்களில் விமானங்களைத் தரையிறக்குவது சவாலான காரியமாகும்.

இப்படியான சூழலில் விமானப் பாதுகாப்பு வல்லுநரான கேப்டன் மோகன் ரங்கநாதன், “கோழிக்கோடு விமான நிலையம், விமானங்கள் தரையிறங்குவதற்குப் பாதுகாப்பானது இல்லை என்பதை 9 ஆண்டுகளுக்கு முன்னரே அறிக்கை மூலம் கூறியிருந்தேன்.

Advertisement

அதன் ரன்வேவை அடுத்து, பள்ளத்தாக்கு உள்ளது. பாதுகாப்புப் பகுதியே கிடையாது. இது குறித்து எச்சரித்து ஆதாரங்கள் சமர்பித்தோம். இருந்தும் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து விமானங்கள் இயக்கப்பட்டன. 2020 ஆம் ஆண்டு, சில விமான நிலையங்களில் விபத்துகள் நடக்க வாய்ப்பிருப்பதாக கணித்திருந்தேன். அதில் கோழிக்கோடு ஏர்போர்ட்டும் ஒன்று. ரன்வேயின் இரு பக்கங்களிலும் 200 அடி பள்ளம் உள்ளன. விமான நிறுவனங்கள், கண்ணை மூடிக் கொண்டு அங்கு தங்கள் விமானங்களை இயக்கி வந்துள்ளன. 

Advertisement