Read in English
This Article is From Aug 10, 2018

கேரளாவில் நிற்காது பெய்யும் கனமழை; தற்போதைய நிலவரம் குறித்த 10 குறிப்புகள்

கேரள மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது

Advertisement
தெற்கு
New Delhi/Thiruvananthapuram:

கேரள மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கனமழைக்கு இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர். இதில் 11 பேர் இடுக்கி மாவட்ட நிலச்சரிவுகளில் இறந்தவர்கள் ஆவர். 15,000க்கும் மேற்பட்டோர் இடம் மாற்றம் செய்யப்படுள்ளனர். தேசிய பேரிடர் ஆணையத்தைச் சேர்ந்த 10 குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கேரளா கனமழையின் 10 முக்கிய குறிப்புகள்

  1. இடுக்கி மாவட்டம் மூணாறிலுள்ள ரிசார்ட்டில் இருபது வெளிநாட்டினர் உட்பட 69 சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர். ரிசார்ட்டுக்குப் செல்லும் பாதை முழுக்க நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்க இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.
  2. இடுக்கி நீர்த்தேக்கம் திறக்கப்பட்டதால், அதிவிரைவாக இறங்கும் நீரின் அழுத்தத்தால் மரங்கள் இடிந்து விழுந்துள்ளன. பெரியார் நதிக்கரை ஓரம் வசித்து வந்த 200 குடும்பத்தினர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
  3. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கேரளாவில் கனமழை பெய்துள்ளதாக மாநில தொழிற்சங்க அமைச்சர் கே.ஜே அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
  4. இடுக்கி நீர்த்தேக்கத்தின் ஒரு பகுதியான செறுதோணி அணையின் நீர்மட்டம் 2,400 அடி அளவை தாண்டியதால், அணையின் ஐந்து மதகுகளும் இன்று காலை திறந்துவிடப்பட்டன.
  5. கனமழைக்கு இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர். இதில் 11 பேர் இடுக்கி மாவட்ட நிலச்சரிவுகளில் இறந்தவர்கள் ஆவர்.
  6. தேசிய பேரிடர் ஆணையத்தைச் சேர்ந்த 10 குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
  7. பாதுகாப்பாக இருக்குமாறு இடுக்கி மாவட்டம் முழுக்க ஒலிபெருக்கிகள் வாயிலாக உள்ளூர்வாசிகளுக்குப் பொது அறிவிப்புகள் செய்யப்பட்டு வருகிறது. வயநாடு, இடுக்கி,, எர்ணாக்குளம், பத்தனம்திட்டா மாவட்டங்ளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  8. திருச்சூர், எர்ணாக்குளம் பகுதிகளுக்கு வெள்ளம் வரும் அபாயம் உள்ளதால், உஷார் நிலையில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.
  9. செறுதோணி அணை நீர்மட்டம் அதிகரித்ததால், கடந்த 26 ஆண்டுகளில் முதன்முறையாக அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
  10. கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக, கொச்சி விமான நிலையத்தில் இருந்து செல்லும் உள்நாட்டு/சர்வதேச விமான சேவைகள் தடை செய்யப்பட்டன.
Advertisement