This Article is From Aug 16, 2018

கேரளா கன மழை: வெள்ள பாதிப்பு அதிகரிப்பு, மீட்பு பணிகள் தீவிரம்!

வெள்ள பாதிப்புகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க, ஜெமினி படகுகளுடன் கூடிய 21 மீட்புக்குழுவினர் கேரளா விரைந்துள்ளனர்

கேரளா கன மழை: வெள்ள பாதிப்பு அதிகரிப்பு, மீட்பு பணிகள் தீவிரம்!
Kochi:

கொச்சி: கேரளா மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் பல பகுதிகளை பாதித்துள்ளது. திருச்சூர், எர்ணாக்குளம் போன்று பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்பு பணிக்களுக்காக தெற்கு கடற்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மூணாறு,சபரிமலை, பொன்முடி போன்ற சுற்றுலா பகுதிகளிலும் வெள்ளம் பாதித்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, திருவனந்தபுரம், பத்தனம்திட்டா ஆகிய பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வெள்ள பாதிப்புகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க, ஜெமினி படகுகளுடன் கூடிய 21 மீட்புக்குழுவினர் கேரளா விரைந்துள்ளனர். பெரியார் நதி அமைந்திருக்கும் ஆலுவா, வயநாடு மாவட்டத்திலும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

பெரும்பாவூர் வெள்ளத்தில் சிக்கிய 45 பேரை மீட்கும் பணியில் மூன்று குழுக்கள் செயல்பட்டு வருகின்றது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

.