This Article is From Sep 03, 2018

மீன் விற்றதாக நகைப்புக்கு உள்ளான கேரள மாணவி ஹனான் விபத்தில் காயம்

கேரளாவில் மீன் விற்றதால், சமூக வலைதளத்தில் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்ட கல்லூரி மாணவி, ஹனன் விபத்தில் சிக்கி காயமடைந்தார்

மீன் விற்றதாக நகைப்புக்கு உள்ளான கேரள மாணவி ஹனான் விபத்தில் காயம்
Kochi:

கேரளாவில் மீன் விற்றதால், சமூக வலைதளத்தில் நகைப்புக்கு உள்ளாக்கப்பட்ட கல்லூரி மாணவி, ஹனன் விபத்தில் சிக்கி காயமடைந்தார்.

21 வயது ஹனான், மேடை நிகழ்ச்சி ஒன்றை முடித்துக் கொண்டு காரில் சென்ற போது, கார் நிலை தடுமாறி மின் கம்பத்தில் மோதியது. இதில் காயமடந்த ஹனான், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இடுக்கி மாவட்டம் தொடுப்புழாவில் பி.எஸ்.சி படிக்கும் ஹனான், கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தான் சேமித்து வைத்திருந்த 1.5 லட்சம் ரூபாயை வழங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

முன்னதாக மீன் விற்று தனது படிப்பு செலவுகளையும், குடும்பத்துக்கு உதவி வருவதாக மாணவி ஹனான் பற்றி செய்தி வெளியானது. பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன.

ஆனால் சமூக வலைதளங்களில் ஒரு சிலர் அவர கஷ்ட படுவதாக கூறுவதை நம்ப முடியவில்லை என்றும், இது போலியானது என்றும் கூறினர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஹனானுக்கு பின்னால் கேரளமே நிற்கிறது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

.