हिंदी में पढ़ें Read in English
This Article is From Aug 26, 2019

தமிழகத்தில் ‘ஊடுருவிய’ தீவிரவாதிகள்; கேரளாவில் கைது செய்யப்பட்ட சஸ்பெக்ட்- புதிய திருப்பமா?

ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கும் கோயம்புத்தூரில் மட்டும் சுமார் 2,000 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Edited by

பொது மக்கள், சந்தேகத்துக்கு இடம் கொடுக்கும்படி எதாவது நடந்தால், 0471 2722500 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது கேரள போலீஸ். (கோப்புப் படம்)

Thiruvananthapuram:

பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும் லஷ்கர்-இ-தய்பா தீவிரவாத அமைப்பின் 6 பயங்கரவாதிகள், இலங்கையிலிருந்து தமிழகத்தில் நுழைந்துள்ளதாக உளவுத்துறை சில நாட்களுக்கு முன்னர் தகவல் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலம் உச்சகட்ட அலெர்ட்டில் இருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் தீவிரவாதிகள் நுழைவதற்கு உதவியதாகக் கருதி கேரளாவில் இருக்கும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மற்றொருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் நுழைந்த தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும் மற்றவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. 

இந்த விவகாரம் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத உளவுத்துறை அதிகாரி ஒருவர் NDTV-யிடம் கூறியபோது, “தற்போது இந்த விவகாரம் குறித்து எவ்விதத் தகவலையும் தெரிவிக்க விரும்பிவில்லை. நாங்கள் கொடுக்கும் தகவல் சஸ்பெக்ட்களின் அடையாளத்தை வெளியிட வழிவகை செய்யும். அதனால், விசாரணை பாதிக்கப்படும்” என்று முடித்துக் கொண்டார். 

Advertisement

கேரளாவைப் பொறுத்தவரை, தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து, விமான நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், பஸ் ஸ்டாண்டுகள், வழிபாட்டுத் தளங்கள் மற்றும் பொது இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

பொது மக்கள், சந்தேகத்துக்கு இடம் கொடுக்கும்படி எதாவது நடந்தால், 0471 2722500 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது கேரள போலீஸ். தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் நபருக்கும், ஊடுருவிய தீவிரவாதிகளுக்கும் சம்பந்தம் இருக்கவில்லை என்றுதான் முதற்கட்ட விசாரணையில் போலீஸ் தரப்பு சொல்கிறது.

Advertisement

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை மற்றும் கோயம்புத்தூரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு நகரங்களில் இருக்கும் உணவகங்கள், விமான நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், தியேட்டர்கள், மால்ஸ் மற்றும் வழிபாட்டுத் தளங்களை போலீஸ் உன்னிப்பாக கவனித்து வருகின்றது. 

ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருக்கும் கோயம்புத்தூரில் மட்டும் சுமார் 2,000 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கோவையில்தான் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கக் கூடும் என்று ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் தகவல் கூறுகிறது. 

Advertisement

கோவையில் அடிப்படைவாதிகள் இதற்கு முன்னர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த 1998 ஆம் ஆண்டு, பாஜக தலைவர் எல்.கே.அத்வானி, கோவைக்கு வருவதையொட்டி, தொடர் வெடிகுண்டு விபத்து ஏற்பட்டது. அதில் 58 பேர் கொல்லப்பட்டனர். 200 பேருக்குக் காயம் ஏற்பட்டது. 

Advertisement