This Article is From May 25, 2020

கோவிட்-19க்குப் பிறகு கேரளாவால் எந்த நெருக்கடியையும் சமாளிக்க முடியும்: பினராயி விஜயன்!

"இப்போது எங்கள் மாநிலத்தில் உறுதி செய்யப்படும் பல கொரோனா வைரஸ் பாதிப்புகள் வெளியில் இருந்து வந்தவை."

கோவிட்-19க்குப் பிறகு கேரளாவால் எந்த நெருக்கடியையும் சமாளிக்க முடியும்: பினராயி விஜயன்!

இனிமேல் எதிர்கொள்ளப் போகும் எந்த நெருக்கடியிலிருந்தும் கேரளா மீண்டு வரும்.

ஹைலைட்ஸ்

  • கேரளாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது
  • சமீப நாட்களாக கேரளாவிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வந்து கொண்டுள்ளனர்
  • இதனால் சமீப நாட்களாக அதிக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
Thiruvananthapuram:

இந்தியாவில் முதன்முதலாக கேரளாவில்தான் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், முதலில் இருந்தே முனைப்பான செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தைத் திறம்பட கையாண்டது கேரள அரசு. இந்நிலையில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், தங்களால் எந்த நெருக்கடியையும் இனிமேல் எதிர்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார். 

“கோவிட்-19க்கு எதிரான போரில் புதுப் புது வழிகளைக் கண்டடைந்து முனைப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது கேரளா. இனிமேல் எதிர்கொள்ளப் போகும் எந்த நெருக்கடியிலிருந்தும் கேரளா மீண்டு வரும்.

இப்போது எங்கள் மாநிலத்தில் உறுதி செய்யப்படும் பல கொரோனா வைரஸ் பாதிப்புகள் வெளியில் இருந்து வந்தவை. அவர்களை நாம் ஒதுக்கிவிடக் கூடாது. இந்த நிலம் அவர்களுக்குச் சொந்தமானதுதான்,” என்று ட்விட்டர் இந்தியா நிறுவனம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட #AskTheCM என்கிற நிகழ்ச்சியில் பேசியுள்ளார் பினராயி விஜயன்.

அவரிடம் வெளி நாடுகளிலிருந்து வந்த கேரள குடிமக்கள், அவர்களுக்கான வேலை வாய்ப்பு, வரப் போகும் பருவ மழைக் காலம் மற்றும் பருவநிலை மாற்றம், அப்படி வரும் சீரழிவுகளுக்கு மாநில அரசின் செயல்பாட்டுத் திறன், விவசாயத் துறை, ஊரடங்கு உத்தரவு தளர்வு உள்ளிட்டப் பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அனைத்திற்கும் பினராயி விஜயன் பதிலளித்துள்ளார். 

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.