This Article is From Oct 03, 2018

இந்தோனேசியா மீட்பு நடவடிக்கைக்கு எரிபொருள் வழங்கிய ஐஓசி!

சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவின் நிவாரண நடவடிக்கைகளுக்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் எரிபொருள் வழங்கியது.

Advertisement
இந்தியா Posted by

சென்னை: சுனாமி தாக்கிய இந்தோனேசியாவுக்கு, 25 பேரல்கள் கொண்ட 5 கிலோலிட்டர் மண்ணெண்ணெய் அனுப்பியுள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவின் நிவாரண நடவடிக்கைகளுக்கு 25 பேரல்கள் கொண்ட மண்ணெண்ணெய் உடனடியாக வான்வழி போக்குவரத்து மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என எங்களுக்கு கோரிக்கை வந்தது.

தமிழ்நாடு மாநில அலுவலக நிர்வாக இயக்குநர் சித்தார்த்தன், கூறியது போல், "போக்குவரத்து முறைமை எங்களுக்கு மீண்டும் வேலை செய்யும் செயல்முறைகளை ஆணையிட்டது. எரியும் தன்மை கொண்ட எரிபொருளை வான்வழி போக்குவரத்து மூலம் அனுப்ப, அதிகாரப்பூர்வ விவரங்களைக் கொண்டு பேக்கேஜிங் செய்வதற்கு கூடுதலாக சான்றிதழ் தேவைப்பட்டது.

Advertisement

இதைத்தொடர்ந்து, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகள், தேசிய பேரிடர் படை மூத்த அதிகாரி ரேகா நம்பியார், மற்றும் விமானநிலைய அதிகாரிகளுடன் இணைந்து 25 பேரல்கள் கொண்ட 5 கிலோலிட்டர் மண்ணெண்ணெய் இந்தோனேசியாவின் நிவாரண நடவடிக்கைகளுக்கு வான்வழி போக்குவரத்து மூலம் அனுப்பவதற்கான ஆய்வு சான்றிதழ், பேக்கஜிங் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெற்று நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து எண்ணெய் பேரல்கள் பேக்கிங் செய்யப்பட்டு இயந்திர சீல் மற்றும் ஸ்டென்சிலிங் செய்து பாதுகாப்பாக இந்தோனேசியா அனுப்பி வைக்கப்பட்டது.

 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement