கஜேந்திர பாராக் கடத்தலை தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள தொழிலதிபர்கள் கவலை அடைந்துள்ளனர்.
Hyderabad: ஹைதராபாத்தில் நிதி நிறுவன அதிபரை கடத்திய கும்பல், ஒரு கோடி ரூபாய் பெற்று கொண்டு விடுவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபர் கஜேந்திர பாராக் ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 11 மணி அளவில் கடத்தி செல்லப்பட்டு ஒரு குடோனில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு அழைப்பு விடுத்த கடத்தல்காரர்கள் ரூ.3 கோடி பணத்தை உடனடியாக தராவிட்டால், கஜேந்திரனை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதில் பதறிப்போன தொழிலதிபர் கஜேந்திர பாராக்கின் குடும்பத்தினர் ரூ.1 கோடியை கடத்தல் காரர்களுக்கு கொடுத்த பின் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கை உடைக்கப்பட்ட நிலையில் கஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து, கடத்தப்பட்ட இடம், பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் கடத்தல்காரர்கள் சென்ற பாதை உள்ளிட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள தொழிலதிபர்கள் தங்களது பாதுகாப்பை எண்ணி பெரிதும் கவலை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன்று கஜேந்திரா கடத்தப்பட்ட நிலையில், நாளை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். தொடர்ந்து, அச்சதிலேயே இருக்க முடியாது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று தொழிலதிபரும், கஜேந்திர பாராக்கின் நண்பருமானவர் தெரிவித்துள்ளார்.