Biswanath, Assam: அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஆற்றைக் கடப்பதற்கு அலுமினிய பாத்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர்
ஆற்றைக் கடந்து பள்ளிக்கு வருவதற்கு பாலம் இல்லாததால், அலுமினிய பாத்திரத்தில் உட்கார்ந்து மாணவ மாணவிகள் ஆற்றைக் கடக்கின்றனர். ஆபத்தான இந்த பயணத்தால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குரியாகியுள்ளது என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். ஆற்றைக் கடப்பதற்கு பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி மாணவர்களின் ஆபத்தான பயணம் குறித்து வெளியான வீடியோ காட்சி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.