Read in English
This Article is From Aug 01, 2018

உலக அளவில் ட்ரெண்டாகி வரும் நடன வீடியோ… எச்சரிக்கும் போலீஸ்!

உலக அளவில் ‘இன் மை ஃபீலிங்ஸ்’ என்ற பாடலுக்கு காருக்கு வெளியே நடனமாடும் ஒரு சேலஞ்ச் வீடியோ ட்ரெண்டாகி வருகிறது

Advertisement
உலகம் (c) 2018 The Washington Post
London:

உலக அளவில் ‘இன் மை ஃபீலிங்ஸ்’ என்ற பாடலுக்கு காருக்கு வெளியே நடனமாடும் ஒரு சேலஞ்ச் வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. இதற்கான வீடியோவை சிலர் பதிவு செய்யும் போது பல இடங்களில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த வீடியோ சேலஞ்சில் யாரும் பங்கேற்க கூடாது என்று உலக அளவில் பல நாட்டு போலீஸ் தங்கள் நாட்டு குடிமக்களை எச்சரித்து வருகிறது. 

கடந்த ஜூன் மாதம், அமெரிக்காவைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் ஷிகி, பாப் பாடகர் டிரேக்கின் ‘இன் மை ஃபீலிங்ஸ்’ என்ற பாட்டுக்கு நடனமாடி ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், கார் கதவைத் திறந்து அவர் ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் படு வைரலானது. இதையடுத்து, #InMyFeelingsChallenge என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டானது. தொடர்ந்து அந்த ஹாஷ்டேக்கில் பல்லாயிரம் பேர் ஷிகி போலவே நடனமாடி வீடியோ வெளியிட்டனர்.

முதலில் இது மிகவும் சாதரணமாக இருந்த நிலையில், சிலர் நடனத்தை வீடியோ எடுக்கும் போது, கீழே விழுந்தும், எதன் மீதாவது மோதிக் கொண்டும் சம்பவங்கள் நடந்தன. விஷயம் கையை மீறிப் போவதைக் கண்டும், நடக்கும் விபத்துகளைக் கண்டும் உலகின் பல்வேறு நாட்டின் போலீஸார் எச்சரிக்கை அடைந்தனர். குறிப்பாக துருக்கி, எகிப்து, அபுதாபி, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் போலீஸ் இந்த நடன வீடியோவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். 

Advertisement

மும்பை போலீஸ், ‘இன் மை ஃபீலிங்ஸ்’ பாட்டுக்கு நடனமாடிய போது நடந்த விபத்துகளை ஒரு வீடியோவாக போட்டு, ‘உங்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் ஆபத்தாக முடியும். பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்’ என்று எச்சரித்துள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement