எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது என்று எண்ணிய நிலையில் புத்தாண்டின் முதல் நாளான இன்று ஒரு அதிர்ச்சியளிக்கும் கருத்தைத் தெரிவித்துள்ளார் கிம்
ஹைலைட்ஸ்
- எங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வோம், கிம் எச்சரிக்கை
- வட கொரியா, தடைகளுக்கு விலக்குக் கேட்கிறது
- அமெரிக்கா இன்னும் இது குறித்து பதில் கருத்து தெரிவிக்கவில்லை
Seoul, South Korea: அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் அணு ஆயுத யுத்தம் வெடிக்குமோ என்று ஒராண்டுக்கு முன்பு வரை உலக நாடுகள் அஞ்சி வந்தன. ஆனால் திடீர் திருப்பமாக வட கொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன், தானாக முன் வந்து, ‘நாங்கள் அமெரிக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்' என்று பகிரங்கமாக அறிவித்தார். இந்த சமிக்ஞைக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் ஆதரவு தெரிவிக்க, இரு நாட்டுத் தலைவர்களும் சென்ற ஆண்டின் நடுவில் சிங்கப்பூரில் சந்தித்தனர்.
அப்போது இரு நாட்டுத் தலைவர்களும், புரிந்தணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பநதத்தின்ப்படி, வட கொரியா, தன்னிடம் இருகுகம் அணு ஆயுதங்களை கைவிடுவதாக ஒப்புக் கொண்டது. அமெரிக்க தரப்போ, ‘வட கொரியா மீது விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் படிப்படியாக நீக்கப்படும்' என்று கூறியது.
எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது என்று எண்ணிய நிலையில் புத்தாண்டின் முதல் நாளான இன்று ஒரு அதிர்ச்சியளிக்கும் கருத்தைத் தெரிவித்துள்ளார் கிம். ‘எங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் புரிந்தணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்னவோ உண்மைதான். ஆனால் அதைத் தவிர அடுத்தக்கட்ட நகர்வுகள் எதுவும் நடக்கவில்லை.
அமெரிக்கா, இந்த மொத்த உலகத்துக்கும் முன்னிலையில் ஒரு விஷயத்தை எங்களுக்கு சத்தியம் செய்து கொடுத்தது. எங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் குறைக்கப்படும் என்று சொல்லியது. ஆனால், அதற்கு ஏற்றாற்போல் அதன் செயல்பாடு இல்லை. அமெரிக்கா, தனது சத்தியத்தைக் காப்பாற்றாமல் செயல்படுமேயானால், எங்கள் நாட்டு இறையாண்மையை நாங்கள் வேறு வழிகளில் பாதுகாக்க வேண்டி வரும்' என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளார்.
கிம்மின் இந்தக் கருத்துக்கு அமெரிக்காவிடமிருந்து இன்னும் எந்தவித அதிகாரபூர்வ பதிலும் வரவில்லை. அதே நேரத்தில் கிம், ‘மீண்டும் அமெரிக்காவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம். இந்த உலகம் விரும்பும் வகையிலான ஒரு முடிவை நோக்கி நாங்கள் நகர தயாராகவே இருக்கிறோம்' என்று ஒரு நேர்மறையான கருத்தோடு விஷயத்தை முடித்துள்ளார்.