This Article is From Mar 09, 2020

கொரோனா தாக்கம் எதிரொலி: பெங்களூரில் மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை

கர்நாடக சுகாதார ஆணையர் பங்கஜ் குமார் பாண்டேவின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் எதிரொலி: பெங்களூரில் மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை

பெங்களூரில் மழலையர் பள்ளி வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • Pre-KG, LKG and UKG classes have been closed with immediate effect
  • The decision was taken on the advice of Karnataka Health Commissioner
  • 39 people have been tested positive for coronavirus in India so far
Bengaluru:

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்திருக்கக்கூடிய நிலையில், அண்டை மாநிலங்களிலும் சிலருக்கு கொரோனா தாக்கப்பட்டிருக்கக்கூடிய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, பெங்களூரில் மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்கக் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக சுகாதார ஆணையர் பங்கஜ் குமார் பாண்டேவின் ஆலோசனையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது ட்வீட்டில், "சுகாதார ஆணையரிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு, பெங்களூரு வடக்கு, தெற்கு மற்றும் கிராமப்புற மாவட்டங்களில் கே.ஜே.ஜி / யுகேஜி வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது." என்று குறிப்பிட்டிருந்தார்.

சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மை செயலாளர் எஸ்.ஆர்.உமாஷங்கருக்கு பங்கஜ் குமார் பாண்டே எழுதிய கடிதத்தில், கோவிட் -19 வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடைமுறைகள் சீராகும் வரை, நகரத்தில் கே.ஜே.ஜி., எல்.கே.ஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கான விடுமுறையை உடனடியாக அமல்படுத்துமாறு குறிப்பிட்டிருந்தார். 

.