This Article is From Jan 04, 2020

‘சூரியன் ‘ஓம்’ என்று சொல்கிறது, கேட்டீங்களா..?’- போலி வீடியோவை ட்வீட்டிய கிரண் பேடி!!

Kiran Bedi News - பலர், கிரண் பேடியை கலாய்த்து, மீம்ஸ்களைப் பறக்கவிட்டுள்ளனர். 

Advertisement
இந்தியா Written by

Kiran Bedi News - சுமார் 2 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் ஓம், ஓம் என்று மீண்டும் மீண்டும் சொல்வது கேட்கிறது.

Kiran Bedi News - ‘நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை', ‘இதை 100 பேருக்கு அனுப்பினால் நினைத்தது நடக்கும்' என்பன போன்ற பல ஃபார்வர்டு மெஸேஜ்களை வாட்ஸ்அப்பில் நாம் அடிக்கடிப் பெறுவது வழக்கம்தான். அதை சிலர் உண்மை என்று நினைத்துப் பகிர்வதும் உண்டு. இதைப் போன்று சமூக வலைதளங்களில் வரும் சில தகவல்களை, புகைப்படங்களை, வீடியோக்களை உண்மையா என்று தெரிந்து கொள்ளாமல் சிலர் பகிர்வதும், பின்னர் கேலிப் பொருளாவதும் தொடர் கதைதான். இப்போது அதைப் போன்ற ஒரு போலி வீடியோவைப் பகிர்ந்துள்ளார் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி. 

கிரண் பேடி பகிர்ந்துள்ள வீடியோவில், “அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சூரியன் எப்படிப்பட்ட சத்தத்தை வெளிப்படுத்துகிறது என்பதை பதிவு செய்துள்ளது. சூரியன் ‘ஓம்' என்று சத்தத்தை வெளிப்படுத்துவதைப் பாருங்கள்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

சுமார் 2 நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் ஓம், ஓம் என்று மீண்டும் மீண்டும் சொல்வது கேட்கிறது. இது போலியான வீடியோ என்றும், பல ஆண்டுகளாக இது வலம் வந்து கொண்டிருப்பதாகவும் கிரண் பேடியின் ட்வீட் பதிவிற்குக் கீழ் பல ட்விட்டர் பயனர்கள் கமென்ட் செய்துள்ளனர். சிலரோ, “ஒரு ஆளுநராக இருந்து கொண்டு, இதைப் போன்ற போலி வீடியோக்களைப் பகிர்கிறாரே,” என்று நொந்து கொண்டனர். 

பலர், கிரண் பேடியை கலாய்த்து, மீம்ஸ்களைப் பறக்கவிட்டுள்ளனர். 

Advertisement
Advertisement