New Delhi: கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவை தொகை மற்றும் விவசாய பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு ஆகியவற்றை வலியுறுத்தி உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரிலிருந்து டில்லியை நோக்கி பேரணி நடத்த போவதாக, பாரதிய கிஷான் விகாஸ் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் அறிவித்திருந்தனர். இதற்கு காவல் துறையினர் தடை விதித்தனர். தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை மாற்றம் செய்ததுடன், உத்தர பிரதேசம் மற்றும் டில்லி மாநில எல்லைகளில் தடுப்பு வைத்தனர்.
ஆனால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் திட்டமிட்டபடி பேரணியாக வந்தனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர். தடுப்புகளை மீறியும் விவசாயிகள் டில்லிக்குள் செல்ல முயன்றனர். தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் விவசாயிகளை அப்புறப்படுத்த காவல் துறையினர் முயன்றனர். இதனால், இரு தரப்புக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பல விவசாயிகளுக்கு காயம் ஏற்பட்டதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோரிக்கைகளை வலியுறுத்தி, தடுப்புகளை உடைத்து டில்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது காவல் துறையினர் நீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடுத்து நிறுத்த முயற்சி செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.