This Article is From Apr 09, 2019

கேரளா காங்கிரஸ் தலைவர் கே.எம். மணி காலமானார்

திரு. மணி அவர்கள் பாலா சட்டசபை தொகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்துள்ளார். 1967 முதல் எந்த தேர்தலிலும் அவர் தோற்கவில்லை

கேரளா காங்கிரஸ் தலைவர் கே.எம். மணி காலமானார்

கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்துள்ளார்

Thiruvananthapuram:

கேரள காங்கிரஸ் தலைவர் கே.எம்.மணி இன்று கொச்சி மருத்துவமனையில் இன்று காலமானார். அவரின் வயது 86 ஆகும். மணி மார்பு தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

நாள்பட்ட நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

 திரு. மணி அவர்கள் பாலா சட்டசபை தொகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்துள்ளார். 1967 முதல் எந்த தேர்தலிலும் அவர் தோற்கவில்லை. 

கே.எம் மணி ஐக்கிய ஜனநாயக முன்னணி அல்லது யூ.டி.எஃப் அரசாங்கத்தில் கேரளா நிதி அமைச்சராக இருந்து வந்தார். கேரள சட்டமன்றத்தில் அதிகபட்ச பட்ஜெட் தாக்கலை (கிட்டதட்ட 13 முறை) செய்த தலைவர் ஆவார். யூ.டி.எஃப் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய கூட்டணியாக இருந்து வருகிறது.  

.