This Article is From Oct 29, 2018

18 எம்.எல்.ஏக்களும் ஜெ., சிலை முன் மன்னிப்பு கேட்டுவிட்டு கட்சியில் சேரலாம்: அதிமுக

2016 சட்டமன்றத் தேர்தலில் 18 எம்.எல்.ஏ.க்களும் வெற்றி பெற்றது ஜெயலலிதாவால் தான் என அதிமுகவின் அதிகார்ப்பூர்வமான நாளேடான நமது அம்மா தெரிவித்துள்ளது

18 எம்.எல்.ஏக்களும் ஜெ., சிலை முன் மன்னிப்பு கேட்டுவிட்டு கட்சியில் சேரலாம்: அதிமுக

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள்.

Chennai:

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களும் மீண்டும் கட்சியில் இணையலாம். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை, அவர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை முன்பு முழங்காலிட்டு மன்னிப்பு கோர வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றம் செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சித்தாவல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து மேலும் அதிமுகவின் அதிகாரப்பூர்வமான நாளேடான நமது அம்மாவில் கூறியதாவது,

2016 சட்டமன்றத் தேர்தலில் 18 எம்.எல்.ஏ.க்களும் வெற்றி பெற்றது ஜெயலலிதாவால் தான். 18 பேரும் டிடிவி தினகரனால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். அதனால், நீங்கள் மனந்திரும்பி அவர்களது தாய் கழகத்திற்கே திரும்பி வர வேண்டும்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள், டிடிவி தினகரனுடன் சென்றதால் தெருக்கு வந்துவிட்டனர். அவர்கள் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளனர். ஜெயலலிதாவால் எம்.எல்.ஏக்களாக ஆனவர்கள் தற்போது தவறானவர்களுடன் சேர்ந்ததால் பதவியை இழந்து நிற்கின்றனர்.

ஜெயலலிதா காட்டிய வழியில் இருந்து ஆதாயங்களுக்காகவோ அல்லது அறியாமலோ, நீங்கள் அதிமுக கோவிலில் இருந்து அமமுகவிற்கு சென்றிருக்கலாம். தற்போது, ஜெயலலிதா சிலை முன்பு முழங்காலிட்டு மன்னிப்பு கோரியும், கட்சிக்கு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தவிட்டு நீங்கள் மீண்டும் கட்சிக்கு திரும்பலாம். ஜெயலலிதாவால் கட்சியை வீட்டு நீக்கப்பட்டவர் டிடிவி தினகரன்.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட பாரம்பரிய மக்கள் இயக்கத்தில் மீண்டும் சேர அன்பு மற்றும் பாசத்துடன் உங்களை வரவேற்கிறோம் என தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேருக்கும் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றம் செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து, கட்சித்தாவல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்ட போது, தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜியும், நீதிபதி எம்.சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனால் வழக்கு 3வது நீதிபதி எம்.சத்தியநாராயணன் அமர்வுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என கடந்த அக்.25ல் தீர்ப்பளித்தார்.

.