Read in English বাংলায় পড়ুন
This Article is From Jan 06, 2019

ஆபத்து வரும் என்பது தெரியும், இருப்பினும்.. சபரிமலையில் தரிசனம் செய்த 2 பெண்கள் பேட்டி!

கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்பினரால் பல்வேறு போராட்டங்கள், சாலை மறியல் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன

Advertisement
Kerala ,
Kerala:

கேரள மாநிலம் மலாபுரத்தை சேர்ந்த கனகதுர்கா, கோழிக்கோடை சேர்ந்த பிந்து, ஆகிய 40 வயது பெண்கள் இருவரும் கடந்த புதனன்று சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்து புதிய வரலாறு படைத்துள்ளனர். இவர்கள் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ததற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து என்டிடிவியிடம் கனகதூர்கா கூறும்போது, எங்களின் இந்த முயற்சிக்கு பலத்த எதிர்ப்புகள் வரும் என்பது தெரியும், எனினும் இது எங்களின் அரசியலமைப்பு உரிமை. இதனால் எனது வாழ்க்கைக்கு பெரும் ஆபத்து வரும் என்பதும் தெரியும், இருப்பினும் நான் கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்ற முடிவில் இருந்தேன். தற்போது இதன் மூலம் நான் பெருமைப்படுகிறேன். சபரிமலை செல்ல விரும்பும் மற்ற பெண்களுக்கு நாங்கள் எளிதான வழியை காட்டியுள்ளோம் என்று கூறினார்.

இது எங்களின் அரசியலமைப்பு உரிமை அதனால் நாங்கள் கோவிலுக்குள் சென்றோம் என்கிறார் பிந்து. மேலும், இது பக்தியை தாண்டி பாலின சமத்துவம் குறித்தது என்றார். தாங்கள் சபரிமலை சென்ற காரணத்தினால் தங்களது குடும்பத்தினரும் தங்களுக்கு எதிராக உள்ளனர் என்றார் கனகதூர்கா.
 

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தும் கூட பெண்கள் செல்ல முடியாமல் இருந்து வந்தது. இவர்களைப் போலவே மற்ற பெண்களும் பல முறை சபரிமலை சந்நிதானம் வரை சென்று பக்தர்களின் போராட்டத்தால் உள்ளே செல்ல முடியாமல் திரும்பியுள்ளனர்.

Advertisement

சிறு அளவிலான மக்களே போராட்டத்திலும், வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான மக்கள் எங்களுக்கு ஆதரவே தெரிவித்தனர். அரசியல் கட்சியினர் இதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்றே இப்படி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

கம்யூனிஸ்ட் அரசு திட்டமிட்டே இரண்டு பெண்களை கோவிலுக்குள் அனுப்பியுள்ளது என்று வலதுசாரி அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், எங்களிடம் மாநில அரசோ, முதல்வரோ நேரடியாக பேசியதே இல்லை. சபரிமலை சன்னிதானத்தில் நாங்கள் தரிசனம் செய்த பின்னர் தலைமை தந்திரி கோவில் நடையை மூடி பின்னர் பரிகாரம் நடத்தி மீண்டும் நடை திறந்த செயல் பெண்களை பெரிதும் அவமதிக்கும் செயல் என பிந்து கூறினார்.

தற்போது, இந்த இரண்டு பெண்களுக்கும் அதிகளவிலான மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் வருகின்றன. இதனால் அவர்கள் இருவருக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்ககப்பட்டுள்ளது.
 

Advertisement
Advertisement